Advertisment

வனத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

தருமபுரி மாவட்ட வனத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
forest jobs

தமிழ்நாடு வனத்துறை வேலை வாய்ப்பு

தமிழ்நாடு வனத்துறையின் கீழ் தருமபுரி வனக்கோட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் தரவு நுழைவு இயக்குபவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: நீதிமன்ற வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

தொழில்நுட்ப உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பி.எஸ்.சி வனவியல்/ வேளாண்மை படித்திருக்க வேண்டும்.

தரவு நுழைவு இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : கணினி பயன்பாடு/ கணினி அறிவியலில் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட வன அலுவலர், தருமபுரி வனக்கோட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தருமபுரி - 636705

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.06.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Dharmapuri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment