Advertisment

நீதிமன்ற வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

திருச்சி மாவட்ட நீதிமன்ற வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs

அரசு வேலைவாய்ப்பு

திருச்சி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் அலுவலக உதவியாளர்/ எழுத்தர், அலுவலக பணியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: தபால் துறை வேலை: தேர்வு இல்லை; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Office Assistant/ Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

Office Peon

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%2001-2023%20DLSA%2C%20Tiruchirappalli_0.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : CHAIRMAN/ PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, District court campus, Tiruchirappalli - 620001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.06.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%2001-2023%20DLSA%2C%20Tiruchirappalli_0.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment