சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

தருமபுரி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 5 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn govt jobs

தருமபுரி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு

தருமபுரி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் தொட்டில் குழந்தை திட்டத்தில் மையத்தில் செவிலியர், உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 7,500

செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in nursing படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 7,500

உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 4,500

காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 4,500

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://dharmapuri.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி - 636705 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Jobs Dharmapuri

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: