scorecardresearch

திண்டுக்கல்: கோடை விடுமுறையில் வகுப்பு நடத்திய பள்ளி மீது அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளியை மூடி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Tamil News
Tamil News Updates

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் உத்தரவை மீறி, கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளியை மூடி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு, பொதுத் தேர்வுகள் முடிந்து அனைத்து வகுப்பினருக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்று அரசின் உத்தரவை மீறி 10 மற்றும் 12-ம்
வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வந்துள்ளனர். தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை மன உளைச்சலுக்கு பள்ளி நிர்வாகம் தள்ளுவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகம் மீது மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் தனியார் பள்ளியில் கோடை விடுமுறையில் நடத்தப்பட்டு வந்த சிறப்பு வகுப்புகள் மூடப்பட்டது. மாணவ மாணவிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Dindigul school education department takes action against private school who classes during summer holiday

Best of Express