மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க பொறியாளர் அணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிளலான பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள், பாலிடெக்னிக் அல்லது தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) படிக்கும் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றப் பின் போட்டியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி குறித்து அந்த அணி செயலாளர் எஸ்.கே.பி கருணாநிதி கூறுகையில், "முதல் சுற்றிப் போட்டி சட்டமன்றத் தொகுதிகள் அளவில் நடைபெறும். அதில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ. 10,000, ரூ. 5,000 மற்றும் ரூ. 3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
முதல் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் பின்னர் மண்டல அளவிலும் இறுதியாக மாநில அளவிலும் போட்டியிடுவார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவருக்கு ரூ.5 லட்சம்
ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்படும்" எனக் கூறினார்.
முன்னதாக, போட்டி தொடர்பான முதல் போஸ்டரை முதல்வர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“