நீட் கவுன்சிலிங் போறீங்களா… இதையெல்லாம் ‘செக்’ செய்ய மறக்காதீங்க!

நீட் கவுன்சிலிங் செல்பவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்..

நீட் 2021 முடிவுகளுக்காக கடந்த ஒரு மாதமாக காத்திருந்த மாணவர்கள், தற்போது மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் எப்போது தொடங்கும் என ஆவலோடு காத்திருக்கின்றனர். ஏற்கனவே, இந்த காலாண்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், கவுன்சிலிங் ஆரம்பிக்காமல் தாமதிப்பது படிப்பை பாதிக்கக்கூடும் என மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த வாரத்தில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.

நீட் கவுன்சிலிங் பிராசஸில் ரெஜிஸ்ட்ரேஷன், பணம் செலுத்தல், விருப்ப கல்லூரி தேர்ந்தெடுத்தல், கல்லூரி முடிவு செய்தல், இருக்கை ஒதுக்கீடு, சம்பந்தப்பட்ட கல்லூரியில் ரிப்போட் செய்வது ஆகியவை அடங்கும்.

இதற்கிடையில், நீட் கவுன்சிலிங் செல்பவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்களை கீழே காணலாம்.

 • நீட் அட்மிட் கார்ட்
 • நீட் ஸ்கோர் கார்ட் அல்லது தரவரிசை பட்டியல்
 • 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
 • 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
 • அடையாள அட்டை ஏதெனும் ஒன்று(ஆதார், பான், வாகன ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட்)
 • 8 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
 • தற்காலிக ஒதுக்கீடு கடிதம்
 • சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)
 • PwD சான்றிதழ் (தேவைப்பட்டால்)

Deemed பல்கலைகழகங்களில் சேர விரும்பும் NRI/ OCI விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்

 • ஸ்பான்சர் செய்யப்பட்டவரின் பாஸ்போர்ட் நகல், தூதரக சான்றிதழ்
 • ஸ்பான்சர்ஷிப் உறுதி படிவம்(முழு காலத்திற்கான செலவுகளை ஸ்பான்சர் ஏற்கத் தயாராக இருப்பது)
 • உறவு உறுதிமொழி (ஸ்பான்சருடனான விண்ணப்பதாரரின் உறவு)

சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில், 8 லட்சத்து 70 ஆயிரத்து 74 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 3 மாணவர்கள், 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Documents needed fpr neet ug councelling 2021

Next Story
யமஹா மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா? வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!யமஹா மோட்டார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com