Advertisment

JEE Main 2025: ஜே.இ.இ மெயின் தேர்வின் சிரமநிலை ஐ.ஐ.டி பொறுத்து மாறுபடுகிறதா?

JEE Main 2025: ஜே.இ.இ மெயின் தேர்வின் சிரமநிலை எந்த ஐ.ஐ.டி வினாத்தாளை உருவாக்குகிறதோ அதனைப் பொறுத்து மாறுபடுகிறதா? நிபுணர் விளக்கம் இங்கே

author-image
WebDesk
New Update
jee exam 2024

கட்டுரையாளர்: சந்தீப் மேத்தா

Advertisment

இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான பொறியியல் ஆர்வலர்களுக்கு, ஜே.இ.இ மெயின் தேர்வு (JEE Main) முக்கியமான தேர்வுகளில் ஒன்றாகும், இது என்.ஐ.டி.,கள், ஐ.ஐ.ஐ.டி.,கள் மற்றும் பிற மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற அனைத்து பெரிய நிறுவனங்களின் சேர்க்கைக்கு நுழைவாயிலாக செயல்படுகிறது. ஜே.இ.இ மெயின் கேள்விகளின் கடினத்தன்மை அந்த குறிப்பிட்ட வினாத்தாளைத் தயாரிக்கும் ஐ.ஐ.டி.,யைப் பொறுத்து மாறுபடுமா என்று பலர் கேட்கிறார்கள்.

ஆங்கிலத்தில் படிக்க: Does difficulty level of JEE Main 2025 depend on which IIT makes the question paper?

ஜே.இ.இ மெயின் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது, ஐ.ஐ.டி.,கள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், ஐ.ஐ.டி.,கள் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்கான வினாத்தாளைத் தயாரிக்கின்றன, இது ஒரு தேர்வு சுழற்சியின் இறுதிக் கட்டமாகும், ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வில் தகுதி பெறுவதன் மூலம் விண்ணப்பதாரர்கள் ஐ.ஐ.டி.,களில் சேர்க்கை பெறலாம். அதேசமயம், ஆண்டுக்கு ஆண்டு தேர்வுமுறை, பாடத்திட்டம் மற்றும் கடினத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய தேர்வு முகமை சீரான தன்மையை உறுதி செய்கிறது.

Advertisment
Advertisement

ஜே.இ.இ மெயின் தேர்வு சிரமநிலை சீரானது ஏன்? 

– தேசிய தேர்வு முகமை மூலம் தரப்படுத்தல்: சமச்சீர் மற்றும் பாரபட்சமற்ற வினாத்தாளை தயாரிப்பதற்கான விதிகளை தேசிய தேர்வு முகமை கொண்டுள்ளது. ஒவ்வொரு தாளும் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் சிரம நிலைக்கு ஏற்றவாறு நன்கு நடுநிலைப்படுத்தப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தின் அடிப்படை புரிதலை சோதிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

- வினா வங்கி அமைப்பு: தேசிய தேர்வு முகமை ஒரு பரந்த வினா வங்கியைப் பயன்படுத்துகிறது மற்றும் இதிலிருந்து ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு கேள்விகளை வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் பாட நிபுணர்களால் இந்தக் கேள்விகள் தயாரிக்கப்படுவதால் வினாத்தாளின் தரம் சீராக இருக்கும் என்பது உறுதி.

- தேர்வின் நோக்கம்: ஜே.இ.இ மெயின் தேர்வு என்பது 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக் கருத்துகளைப் பற்றிய மாணவர்களின் புரிதலை அளவிடுவதாகும். ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு போல் கடினமானதாக இல்லை, ஏனெனில் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு மிகவும் ஆழமான பகுப்பாய்வு திறன்களை மதிப்பிடுவதாகும்.

ஐ.ஐ.டி ஈடுபாடு பற்றிய தவறான கருத்து

அது ஒரு குறிப்பிட்ட ஐ.ஐ.டி.,யைச் சார்ந்திருப்பதற்கான காரணம், ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தேர்வான மாணவர்கள் வெவ்வேறு ஐ.ஐ.டி.,களின் தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, ஒவ்வொரு ஐ.ஐ.டி.,யும் வெவ்வேறு அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம், இது ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வில் சில மாறுபாடுகளைக் கொண்டுவருகிறது. ஆனால் ஐ.ஐ.டி.,கள் ஜே.இ.இ மெயின் தேர்வில் ஈடுபடாததால், அதே லாஜிக் வேலை செய்யாது.

சிரமநிலையை பாதிக்கும் காரணிகள்

- கவனம் செலுத்தும் பகுதிகளை மாற்றுதல்: ஒட்டுமொத்த சிரமம் ஒன்றுதான், ஆனால் சில வருடங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தலாம், இதனால் மாணவர்களுக்கு வினாத்தாள் கடினமாகவோ அல்லது எளிதாகவோ தோன்றலாம்.

- தனிப்பட்ட மாணவர்களின் தயாரிப்பு: சிரமம் என்பது பெரும்பாலும் உணர்தல் மற்றும் குறிப்பிட்ட தலைப்புகளுக்கு ஒரு மாணவர் எவ்வளவு சிறப்பாகத் தயாராக இருக்கிறார் என்பதைப் பொறுத்தது.

- ஒப்பீட்டு பகுப்பாய்வு: மாணவர்கள் வெவ்வேறு ஷிப்ட்களின் வினாத்தாள்களை ஒப்பிடலாம், மேலும் இயல்பாக்குதல் நுட்பங்கள் இந்த சிக்கலை தீர்க்கின்றன, ஆனால் மாணவர்கள் சிரமத்தை சீரற்றதாக உணரலாம்.

ஜே.இ.இ மெயின் தேர்வின் சிரம நிலை எந்த ஐ.ஐ.டி வினாத்தாளைத் தயாரிக்கிறது என்பதைப் பொறுத்தது அல்ல, ஏனெனில் ஐ.ஐ.டி.,கள் ஜே.இ.இ மெயின் தேர்வுக்கான வினாத்தாள்களைத் தயாரிப்பதில்லை. மாறாக, தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் தரப்படுத்தப்பட்ட மற்றும் நியாயமான தேர்வுகளை நடத்த முயற்சிக்கிறது. மாணவர்கள் தங்களுக்கு உதவாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதை விட தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு முறையைப் புரிந்துகொண்டு, அடிப்படைக் கருத்துகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால், கடினமான நிலை என்று அழைக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் நம்பிக்கையுடன் தேர்வு எழுதலாம்.

(எழுத்தாளர் வித்யாமந்திர் வகுப்புகளின் இணை நிறுவனர்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jee Main
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment