பாலிடெக்னிக் மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை: இனி மதிப்பெண்களுக்கு பதில் திறமைக்கே முக்கியத்துவம்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் புதிய தேர்வு முறையை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய முறையில், மாணவர்கள் மனப்பாடம் செய்து எழுதுவதற்குப் பதிலாக, அறிவை சோதிக்கும் வகையில் வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் புதிய தேர்வு முறையை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய முறையில், மாணவர்கள் மனப்பாடம் செய்து எழுதுவதற்குப் பதிலாக, அறிவை சோதிக்கும் வகையில் வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
DoTE new exam method

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை: இனி மதிப்பெண்களுக்கு பதில் திறமைக்கே முக்கியத்துவம்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், சுயநிதி நிறுவனங்கள் உட்பட, டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை மற்றும் செமஸ்டர் தேர்வு நடத்தும் முறையை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DoTE) அறிமுகப்படுத்தியுள்ளது. 

Advertisment

இதுகுறித்து உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதைய தேர்வு முறை, மனப்பாடம் செய்து எழுதும் நீண்ட வினா விடைகள் மட்டுமே சார்ந்துள்ளது. இது மாணவர்களை மனப்பாடம் செய்ய தூண்டுகிறது. இதனால், அவர்களுக்கு கருத்துகள் குறித்த தெளிவும், செய்முறை அறிவும் கிடைப்பதில்லை. இது 21-ம் நூற்றாண்டுக்கான திறனுள்ள மாணவர்களை உருவாக்குவதற்கு போதுமானதாக இல்லை" என்று கூறினார்.

புதிய வினாத்தாள் முறையை வடிவமைப்பதற்காக, தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் கல்வித் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் ஆகஸ்ட் 14 வரை கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தது.

புதிய தேர்வு முறையில், செய்முறை விளக்கம், உருவகப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் மற்றும் சோதனை அடிப்படையிலான மதிப்பீடுகள் மூலம் மாணவர்களின் நடைமுறைத் திறன்கள் சோதிக்கப்படும். தேர்வின் கால அவகாசம் 2 மணி நேரமாக இருக்கும், மேலும் இது ஒரு நேரடித் தேர்வாக (offline) நடத்தப்படும். தேர்வு முறையின்படி, 20 ஒரு மதிப்பெண் கட்டாய வினாக்கள் மற்றும் எட்டு விளக்க வினாக்கள் இருக்கும். இதில், ஒவ்வொரு வினாவுக்கும் இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். மாணவர்கள் இந்த 8 வினாக்களில் இருந்து ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கலாம்.

Advertisment
Advertisements

அதேபோல், 10 மதிப்பெண்கள் கொண்ட 3 விளக்க வினாக்களுக்கும் மாணவர்கள் விடையளிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, மொத்த மதிப்பெண்கள் 60 ஆக இருக்கும். இந்த புதிய வினாத்தாள் முறை வரும் செமஸ்டர் தேர்வுகளில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தேர்வு முறை மாற்றத்தை துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தெரிவிக்க அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Educational News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: