DRDO, RAC Jobs 2019: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முதன்மையான ஆய்வகமாக இருக்கும் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சில் 116 பயிற்சி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. பட்டதாரி மற்றும் டிப்ளோமா படித்தவர்களுக்கு பயிற்சி அப்ரெண்டீஸ் காலியிடங்கள் உள்ளன. ஒரு வருட காலத்திற்குப் பிறகு அவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். பட்டதாரி பயிற்சி அப்ரெண்டீஸுகளுக்கு ரூ 9000, ஐடிஐ (டிப்ளோமா) படித்தவர்களுக்கு ரூ.8000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
டி.ஆர்.டி.ஒ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு 2019 அறிவிப்பின் படி, மொத்தம் 116 பயிற்சி காலியிடங்களில் 60 இடங்கள் பட்டதாரிகளுக்கானது. அதற்கான தகுதி பின்வருமாறு: பி.இ அல்லது பி.டெக்கில் கணினி அறிவியல் பொறியியல் / ஐடி, எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், மின் பொறியியல், இயந்திரவியல் அல்லது பி.எஸ்.சி லைப்ரரி சையின்ஸ் படித்திருக்க வேண்டும்.
மோடி – ஜின்பிங் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
Advertisment
Advertisements
56 டெக்னீசியன் அப்ரண்டிஸ் காலியிடங்களும் உள்ளன, அதற்கான தகுதி பின்வருமாறு: டிப்ளமோவில் கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம், மின்னணு பொறியியல், மின் பொறியியல், இயந்திர பொறியியல் மற்றும் சிவில் பொறியியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும். கணினி அறிவியல் / ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் ஆகியவற்றிற்கான அதிகபட்ச இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
எப்படி அப்ளை செய்வது?
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் www.mhrdnats.gov.in -ல் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. 2017, 2018 அல்லது 2019 ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ ஆர்.ஏ.சி இணையதளத்தில் 1 நவம்பர் 2019 காலை 9:00 மணி முதல் 20 நவம்பர் 2019 மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்லைன் விண்ணப்பத்துடன் வயது, தகுதி மற்றும் சாதிக்கு தொடர்புடைய சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றின் நகல்களை பதிவேற்ற வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்த ஆதரத்திற்காக விண்ணப்பதாரர்கள் தங்களுக்கென ஒரு காப்பி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன், டிஆர்டிஓ ஆட்சேர்ப்பு 2019 அறிவிப்பை ஒரு முறை பார்த்துக் கொள்ளவும்.