Advertisment

DRDO scholarship for girls: கல்லூரி மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு

DRDO scholarship for girls 2019:விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 10 வரை drdo.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DRDO scholarship, DRDO scholarship girls, DRDO girls scholarship, உதவித்தொகை,டிஆர்டிஓ

DRDO scholarship, DRDO scholarship girls, DRDO girls scholarship, உதவித்தொகை,டிஆர்டிஓ

டிஆர்டிஓ பெண்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் முதுகலை (பி.ஜி) மற்றும் இளங்கலை (யுஜி) படித்துக்கொண்டிருக்கும் மாணவியர்களுக்கு பயன்படக்கூடிய அளவில் உள்ளது. முதுகலை பட்டப்படிப்பு திட்டத்தில் உள்ள மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ .1.86 லட்சம் வரை  உதவித்தொகை பெறலாம், அதே சமயம் இளங்கலை (யுஜி) மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ .1.2 லட்சம் வரை உதவித்தொகை கிடைக்கும்.

Advertisment

ஏரோஸ்பேஸ் / ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங், விண்வெளி பொறியியல் மற்றும் ராக்கெட்ரி / ஏவியோனிக்ஸ் / விமான பொறியியல் ஆகிய பிரிவுகளில் படிக்கும் மாணவியர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கெல்லாம் கிடைக்கும்:முதுகலை படிப்பு உதவித்தொகை அவர்கள் எடுத்த GATE ஸ்கோர் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். முதுகலை படிப்பு உதவித் தொகை அவர்கள் எடுத்த JEE(Main) ஸ்கோர் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது: ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஜூலை 25-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 10 வரை drdo.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment