டெல்லி பல்கலைக்கழகம் சமீபத்தில் ‘சாரே ஜஹான் சே அச்சா’வை எழுதியவரும், பின்னர் பாகிஸ்தானின் தேசிய கவிஞராக நியமிக்கப்பட்டவருமான கவிஞர் இக்பால் பற்றிய அத்தியாயத்தை நீக்கியுள்ளது. இதற்கிடையில், அரசியல் அறிவியலை முதன்மையாகக் கொண்ட பி.ஏ. படிப்பைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றிய புதிய பாடநெறி விருப்ப பாடமாக தேர்வு செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடக்கத்தில், நவீன இந்திய அரசியல் சிந்தனையாளர்கள் பகுதியில் சாவர்க்கர் ஒரு அத்தியாயமாக இருந்தது.
இதையும் படியுங்கள்: கோவையில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய 9 மாத கர்ப்பிணி
இதற்கிடையில், காந்தி பற்றிய அத்தியாயத்திற்கு எதிராக சாவர்க்கர் அத்தியாயம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு சில ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை கூட்டத்தில் கலந்து கொண்ட அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் அலோக் பாண்டே, “முன்பு, ஐந்தாம் செமஸ்டரில் காந்தி பற்றிய தாள்களும், ஆறாம் செமஸ்டரில் அம்பேத்கர் பற்றிய தாள்களும் இருந்தன. இப்போது, சாவர்க்கர் பற்றிய ஒரு தாளை அறிமுகப்படுத்தியுள்ளனர். சாவர்க்கரை அறிமுகப்படுத்துவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ஆனால் காந்தி தாளுக்கு எதிராக அதைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் காந்தி குறித்த தாளை ஐந்தாம் செமஸ்டரிலிருந்து ஏழாவது செமஸ்டருக்கு மாற்றியுள்ளனர்,” என்று கூறினார். மேலும், "மூன்றாண்டு படிப்பைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் இந்தத் தாளைப் படிக்க மாட்டார்கள் என்பதால் அவர்கள் காந்தி பற்றிய தாளை படிப்பிலிருந்து அகற்ற திட்டமிட்டுள்ளனர் என்பது தெரிகிறது" என்றும் அலோக் பாண்டே கூறினார்.
முன்மொழிவு விவாதிக்கப்பட்ட நிலைக்குழுவில் ஒரு அங்கமாக இருந்த அலோக் பாண்டே, அவர்கள் வயது காலவரிசைப்படி 5 ஆவது செமஸ்டரில் காந்தியையும், 6 ஆவது செமஸ்டரில் சாவர்க்கரையும், 7 ஆவது செமஸ்டரில் அம்பேத்கரையும் பற்றி கற்பிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்த நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ராஜேஷ் ஜா, விமர்சன சிந்தனையை வளர்ப்பதற்காக மாணவர்கள் ஆரம்ப செமஸ்டர்களில் காந்தியை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
"பாடநெறி இரண்டு அத்தியாவசிய நோக்கங்களைச் சந்திக்க முயல்கிறது: ஒன்று, மாணவர்களுக்கு நூல்களைப் படிக்கும் கலையை அறிமுகப்படுத்துதல், அதன் கருத்தியல் மற்றும் வாத கட்டமைப்பைப் புரிந்து கொள்ள உதவுதல் மற்றும் பரந்த அறிவார்ந்த மற்றும் சமூக-வரலாற்று சூழலில் நூல்களைக் கண்டறியும் திறன்களைப் பெற அவர்களுக்கு உதவுதல்,” என்று பாடத்தின் நோக்கம் கூறியது.
நெருக்கமான வாசிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட காந்திய சிந்தனையின் கருப்பொருள்கள் "குறிப்பாக நமது காலத்திற்கு பொருத்தமானவை" என்று அது கூறியது.
பல்கலைக்கழகம் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக நான்கு ஆண்டு திட்டத்தை ஏற்றுக்கொண்டது மற்றும் மாணவர்கள் மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு அல்லது நான்கு ஆண்டு இளங்கலைப் படிப்பைத் தேர்வுசெய்யலாம்.
பல்கலைக்கழகம் பல பாடங்களுக்கான நான்கு ஆண்டு திட்டங்களுக்கான பாடத்திட்டங்களை தயாரித்து வருகிறது.
(கூடுதல் தகவல்கள்: எக்ஸ்பிரஸ் செய்தி சேவை)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.