ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான (ஜேஇஇ) தேதியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்த நிலையில், சூப்பர் 30 நிறுவனர் ஆனந்த்குமார் தேர்வர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
Advertisment
இந்த இரண்டு மாத கால இடைவெளியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், தேர்வர்கள் தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், முடிந்தவரை மாக் டெஸ்டுகளில் தங்கள் திறனை சோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பெரும்பாலான மாணவர்கள் ஒரு பார்முலா எவ்வாறு உருவாக்கப்பட்டது? அதன் பின்புலன் என்ன? அதன் இயல்பு என்ன? என்பதைப் புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யவே முனைகிறார்கள். சில அறிவியல் கூற்றுகள் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை அறிய இந்த இரண்டு மாத இடைவெளி சிறந்த வாய்ப்பாகும். மனப்பாடம் செய்வதினால் மட்டும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு உட்பட பிற நுழைவுத் தேர்வுகளை ஒருவர் தேர்ச்சியடையலாம். இருப்பினும், ஒவ்வொரு அறிவியல் சமன்பாடுகளுக்கு பின்னால் உள்ள தர்க்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த தனிமைப்படுத்துதல் அதெற்கெல்லாம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்”என்று தெரிவித்தார்.
Advertisment
Advertisements
பொதுவாக, ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு ஜனவரி/ஏப்ரல் என இரு கட்டங்களாக நடைபெறும். ஜனவரி தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், ஏப்ரல் மாத தேர்வு தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.
புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து குறித்து பேசிய அவர் “பிரபல கணிதவியலாளர் டேவிட் ஹில்பெர்ட்டின் கூற்றுப்படி, எளிமையான புத்தகங்கள் அதிகமாக ஈர்க்கும். எனவே, முதலில் அடிப்படை கருத்தை போதிக்கும் புத்தகங்களைப் பின்பற்றி உங்கள் படிப்ப்பிறகு மறுதொடக்கம் கொடுங்கள். ஒவ்வொரு கருத்துக்கும் பின்னால் உள்ள காரணத்தை அறிய முயற்சி செய்யுங்கள், எடுத்துக்காட்டாக, முக்கோணத்தின் பரப்பளவு ஏன் 1/2 b/h என்று எடுத்துக்கொள்கிறோம்”என்று வினவினார்.
ஆனந்த்குமார் சமீபத்தில் மாணவர்களுக்கான தனிக் கல்வி சேனலை அமைக்க கோரி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது . “பொது முடக்கநிலையின் போது, YouTube மூலமாகவும், பிற ஆன்லைன் ஊடகத்தின் மூலம் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர் இருப்பினும், ஸ்மார்ட்போன்கள் அல்லது மடிக்கணினிகள் கிடைக்காதவர்களுக்கு, அரசாங்கம் ஒரு பிரத்யேக கல்வி சேனலைத் தொடங்க வேண்டும். விவசாயிகளுக்கான கிருஷி தர்ஷன் சேனலைப் போல. கோவிட்-19 பெருந்தொற்று அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு பள்ளி கல்வியை பாதிக்கும் என்பதால் இந்த முயற்சி ஆட்டத்தையே மாற்றியமைக்கும் ”என்று குறிப்பிட்டார்