/tamil-ie/media/media_files/uploads/2019/07/Z1197.jpg)
Railway Budget 2020, Indian Rail Budget 2020
1216 railway Apprentice Posts: கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ஆட்சேர்ப்பு பிரிவு (ஆர்.ஆர்.சி) தொழில் பழகுனர் பயிற்சிகளுக்கான (அப்ரென்டிஷிப்) அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 1216 தொழில் பழகுனர் பயிற்சி பணிகள் நிரப்பப்பட உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை - இந்த மாதம் 7ம் தேதியிலிருந்து, அடுத்த மாதம் ஜனவரி 6ம் தேதியோடு முடிவடிகிறது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான rrcbbs.org.in இல் விண்ணப்பிக்கலாம்.
இந்த, 1216 அப்ரென்டிஷிப் பணிக்காக எந்த தேர்வும் நடத்தப்படாது. 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ சான்றிதழில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் ஒரு தகுதி பட்டியல் உருவாக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மருத்துவ உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
உத்தியோகபூர்வ அறிவிப்பின் படி ஜனவரி 20ம் தேதிக்குள் வேட்பாளர்கள் ஆவண சரிபார்ப்பு மற்றும் உடற்பயிற்சி சோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.
ரயில்வே ஆட்சேர்ப்பு: தகுதி
வயது வரம்பு : விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க தகுதி பெற 15 வயது பெற்றிருக்க வேண்டும். உயர் வயது 24 வயதுக்குள் இருத்தல் வேண்டும் .
எஸ்சி/எஸ்டி போன்ற பட்டியல் தேர்வர்களுக்கு உயர் வயதுவரம்பில் ஐந்து வருடம் தளர்வும், ஓபிசிக்கு பிரிவினருக்கு மூன்று வருட தளர்வும், பிடபிள்யூடி வேட்பாளர்களுக்கு பத்து ஆண்டும் தளர்த்தப்படுகிறது.
கல்வி: வேட்பாளர்கள் 10 சதவீத வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ .100 கட்டணம் செலுத்த வேண்டும்.
முன்பதிவு செய்யப்பட்ட பிரிவு வேட்பாளர்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.