ECIL recruitment 2022 for 1625 Junior Technician vacancies apply soon: இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 1625 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்கு தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஜூனியர் டெக்னீசியன்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1625
எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் – 814
எலக்ட்ரீசியன் – 184
ஃபிட்டர் – 627
கல்வித் தகுதி : எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்/எலக்ட்ரீசியன்/ஃபிட்டர் பிரிவுகளில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 31.03.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : முதல் ஆண்டு – ரூ. 20,480
இரண்டாம் ஆண்டு – ரூ. 22,528
மூன்றாம் ஆண்டு – ரூ. 24,780
தேர்வு செய்யப்படும் முறை : ஐடிஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதையும் படியுங்கள்: கரூர் மாவட்ட TNSRLM வேலைவாய்ப்பு; 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.ecil.co.in/advt1322.php என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.04.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://careers.ecil.co.in/app/ADVT_13_2022.pdf என்ற இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil