இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா (ECIL) நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீசியன் (Junior Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 1100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஜூனியர் டெக்னீசியன்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1100
எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் – 275
எலக்ட்ரீசியன் – 275
ஃபிட்டர் – 550
கல்வித் தகுதி : எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்/எலக்ட்ரீசியன்/ஃபிட்டர் பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 16.01.2024 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 22,528
தேர்வு செய்யப்படும் முறை : ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.ecil.co.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.01.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ecil.co.in/jobs/Advt_JTC_01_2024.pdf என்ற இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“