சுந்தர் பிச்சை என் ரோல் மாடல்: ஜே.இ.இ முதல் மாணவர் சக்சஸ் ஸ்டோரி

JEE Main topper Mridul Agarwal aims for IIT-Bombay Tamil News: ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்த மிருதுல் அகர்வால் மும்பை ஐஐடி கல்லூரியில் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை வெற்றி தனக்கு மிகவும் உந்துதலாக இருந்ததாக மிருதுல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Education and job Tamil News JEE Main topper Mridul Agarwal aims for IIT-Bombay, says Sundar Pichai’s success motivates him

Education and job Tamil News: ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் முயற்சிலேயே மிருதுல் 99.99 சதவீத மதிப்பெண் எடுத்தார். தற்போது மார்ச் மாத தேர்வில் 100 சதவீத மதிப்பெண்ணை முதலிடத்தை பிடித்துள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில்,”இரண்டு தேர்வுகள் முடிவுகளுக்கு சிறிய வித்தியாசம்தான். என்னுடைய திறனை சோதிக்கவே பிப்ரவரி மாதத்தில் எழுதினேன். தற்போது மார்ச் மாதத்தில் 100 சதவீதம் கிடைத்துள்ளது” என்று கூறினார். மொத்தமாக 13 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் மார்ச் 24-ம் தேதி வெளியானது.

ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு தயாரானது குறித்து தெரிவிக்கையில், “கோவிட் 19 தொற்று காரணமாக பயிற்சி மையத்துக்கு செல்லமுடியவில்லை. அதனால் எனக்கு அதிக நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் நான் பயிற்சியை மேற்கொண்டு தேர்வுக்கு தயாரானேன். தேர்வுக்கு என்சிஆர்டி புத்தகங்களே மட்டுமே படித்தேன். ஆய்வக பாடங்களை கூட விட்டுவைக்காமல் அதையும் படித்தேன். தேர்வில் அதிலிருந்து கேள்விகளும் வந்திருந்தன. அதுமட்டுமல்லாமல் முந்தைய ஆண்டு வினாக்கள் மற்றும் விடைகளை ஆய்வு செய்து படித்தேன். இது தேர்வுக்கு மிகவும் உதவியது.

சுந்தர் பிச்சை எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவரை முன்னுதராணமாக கொண்டுதான் படித்தேன். வரும் காலத்தில் அவரைப்போல் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் அல்லது ஸ்டார்ட் அப் தொடங்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” ( https://t.me/ietamil )

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Education and job tamil news jee main topper mridul agarwal aims for iit bombay says sundar pichais success motivates him

Next Story
12-ம் வகுப்பு மாணவர்களும் முழு தேர்ச்சி அறிவிக்க ஆலோசனை : துணை முதல்வர் தகவல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com