Advertisment

பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு 8% அதிகரிப்பு; வேறு பெரிய அறிவிப்புகள் இல்லை!

கடந்த ஆண்டு, கல்வி அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 2022-23ல் 1.04 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 1.12 லட்சம் கோடி ரூபாயாக 8 சதவீதம் அதிகரிப்பு; தேசியக் கல்விக் கொள்கை மாற்றங்களை ஏற்படுத்துகிறது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

author-image
WebDesk
New Update
education budget

தேசியக் கல்விக் கொள்கை மாற்றங்களை ஏற்படுத்துகிறது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2024க்கான தனது உரையில், கடந்த 10 ஆண்டுகளில் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் STEM படிப்புகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மீண்டும் வலியுறுத்தினார். தேசியக் கல்விக் கொள்கையானது மாற்றங்களைச் சீர்திருத்தங்களை ஏற்படுத்துகிறது என்றும் நிதியமைச்சர் கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Education Budget 2024 Live Updates: No big announcements this time, here’s how industry has reacted

கடந்த ஆண்டு, கல்வி அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 2022-23ல் 1.04 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 1.12 லட்சம் கோடி ரூபாயாக 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023 பட்ஜெட்டில், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகத்தை மத்திய அரசு அறிவித்தது. 2018 ஆம் ஆண்டில் அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரால் இதேபோன்ற முயற்சி அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, ஐ.ஐ.டி காரக்பூரில் ஒரு தேசிய டிஜிட்டல் நூலகம் நடத்தப்படுகிறது.

கூடுதலாக, கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஒதுக்கீடு ரூ.713.98 கோடி (9.33 சதவீதம்) (2022-23 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.7650.00 கோடியிலிருந்து 2023-24 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.8363.98 கோடி) மற்றும் நவோதயா வித்யாலயா சமிதியில் ரூ.5013.501371 கோடி அதிகரித்துள்ளது. (33.32 சதவீதம்) (2022-23 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.4115 கோடியிலிருந்து 2023-24 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.5486.50 கோடி வரை).

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Union Budget Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment