பள்ளிக்கூடங்களில் சரியாக பணிக்கு வராத ஆசிரியர்களின் விவரங்களை அலுவலகத்திற்கு அனுப்புமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், துறையின்கீழ் இயங்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெரும் ஆரம்பப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், நீண்ட காலமாக பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள், அதிககால விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி பள்ளிகளுக்கு விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை மிக அவசரமாக கருதி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த பட்டியலின் கீழ் வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த அறிக்கையினால் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.