Education -Jobs tamil news: முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்துள்ளது. அதன் படி இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பெற்று விண்ணப்பிக்கலாம் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இறுதி நாளாக மார்ச் 25ஆம் தேதி மாலை 5 மணி என்பதையும் குறிப்பிட்டுள்ளது. அதோடு ஜூன் 26 , 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் இந்த போட்டித் தேர்விற்கு பாட வாரியாக காலிப்பணியிடங்களை பின்னவருமாறு காணலாம்:
தமிழ் – 268
ஆங்கிலம் – 190
கணிதவியல் – 110
இயற்பியியல் – 94
வேதியியல் – 177
விலங்கியியல் – 106
தாவரவியல் – 89
பொருளாதாரவியல் – 287
வணிகவியல் – 310
வரலாறு – 112
புவியியல் – 12
அரசியல் அறிவியியல் – 14
வீட்டு அறிவியியல் – 3
இந்திய கலாச்சாரம் – 3
உயிர் வேதியியல் – 1
உடற்கல்வி இயக்குநர் தரம் I – 39
கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I. – 39
எப்படி விண்ணப்பிப்பது?
தேர்வுக் கட்டணம் ரூ.500 (எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தேர்வாளர்களுக்கு ரூ.250) செலுத்தி ஆன்லைன் நெட்பேங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு போன்றவற்றின் மூலமாக செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சேவைக் கட்டணமும் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் மார்ச் 25ஆம் தேதி மாலை 5 மணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேர்வு பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளவும், விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து கொள்ளவும் இந்த இணைய பக்கத்தை விசிட் செய்யவும். (http://trb.tn.nic.in).
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil