கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று ( ஜனவரி- 9 )  திறக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் இன்று (9.2.2021) நடைபெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” 100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது புகாரின் அடிப்படையில் உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று தெரிவித்தார்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக, தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் தொடர்பாக பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  இந்த, அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், தனியார் பள்ளிகள் 40 சதவீத கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்றும், மீதமுள்ள 35 சதவீத கட் டணத்தை வரும் பிப்ரவரிக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது. மேலும், 100 சதவீத கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Education minister warns against high tution fee tamil nadu school fees

Next Story
50 சதவீத மாணவர்களுடன் கல்லூரிகள் இயங்க வேண்டும்: யுஜிசி வழிமுறைகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com