/indian-express-tamil/media/media_files/2025/05/30/y2dNmQOXdRMcCCYFxa3m.jpg)
சி.பி.எஸ்.சி, நவோதயா பள்ளிகளில் மோடி படம்: மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு
பிரதமர் மோடியின் குழந்தைப் பருவ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட 'சலோ ஜீதே ஹைன்' (Chalo Jeete Hain) என்ற திரைப்படத்தை செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 2 வரை பள்ளிகளில் திரையிட வேண்டும் என கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (KVS), நவோதயா வித்யாலயா சமிதி (NVS) ஆகிய அமைப்புகளுக்கு செப்டம்பர் 11 அன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
படத்தின் நோக்கம்:
இந்தத் திரைப்படம், இளம் மாணவர்களுக்கு ஒழுக்கம், சேவை மனப்பான்மை மற்றும் பொறுப்புணர்வு போன்ற விஷயங்களை எடுத்துரைக்கும் வகையில் உள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, தார்மீக சிந்தனையைத் தூண்டுவதோடு, சமூக-உணர்ச்சி கற்றல் (social-emotional learning), சுயசிந்தனை, விமர்சன சிந்தனை போன்ற திறன்களை வளர்க்க உதவும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பிரேரணா திட்டத்தின் ஒரு பகுதி:
இந்த திரைப்படம், கல்வி அமைச்சகத்தின் 'பிரேரணா' (Prerana) என்ற அனுபவக் கற்றல் திட்டத்தின் ஒருபகுதியாக கருதப்படுகிறது. 'சுவாபிமான் அவுர் வினய்', 'சௌர்யா அவுர் சாஹஸ்', 'கருணா அவுர் சேவா' உள்ளிட்ட 9 முக்கிய மனித விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது இந்த திட்டம். மோடி தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய குஜராத்தின் வாட்நகரில் உள்ள 1888-ஆம் ஆண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளியில் இருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திரைப்படத்தின் சிறப்பம்சங்கள்:
சுவாமி விவேகானந்தரின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட 'நரு' என்ற சிறுவன், தனது சிறிய உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதே இந்தத் திரைப்படத்தின் மையக்கரு. இந்தத் திரைப்படம், 66வது தேசிய திரைப்பட விருதுகளில் 'குடும்ப விழுமியங்கள் குறித்த சிறந்த அனிமேஷன் அல்லாத படத்திற்கான தேசிய விருது' பெற்றது.
மறு வெளியீடு: 2018-ல் வெளியான இந்தப் படம், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளிலும் மீண்டும் திரையிடப்படுகிறது. 'பிறருக்காக வாழ்பவர்களே உண்மையில் வாழ்கிறார்கள்' என்ற சுவாமி விவேகானந்தரின் மேற்கோளை இந்தத் திரைப் படம் மையமாக் கொண்டுள்ளதாக பத்திரிகை தகவல் பணியகம் (PIB) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us