Advertisment

டாப் ரேங்க் மாணவிகளுக்கும் தடையாக இருக்கும் குடும்பச்சூழல், கலாச்சாரம்: ஆய்வு ரிப்போர்ட்

குடும்ப சூழல் மற்றும் சமூகம் -பண்பாட்டு கலாச்சாரங்கள் இடையூறாக இருப்பதாக கூறுகின்றனர்.

author-image
WebDesk
New Update
Tracking India’s Toppers - டாப் ரேங்க் மாணவிகளுக்கும் தடையாக இருக்கும் குடும்பச்சூழல், கலாச்சாரம்: ஆய்வு ரிப்போர்ட்

Education news in tamil: இந்தியாவில் உயர்மதிப்பெண்கள் பெற்று வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகின்றது என "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1996 - 2015 ஆண்டுக்கு இடையே மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் நடத்திய 10, 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் 86 நபர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். அதில் 51 நபர்கள் ஆண்கள், 35 நபர்கள் பெண்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 35 பெண்களில் 14 பெண்கள் வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள். மற்ற பெண்கள் இந்தியாவிலே வசித்து வருகின்றனர். குடும்ப சூழல், சமூக - கலாசாரம் மற்றும் பாலின பாகுபாடுகள் இடையூறாக உள்ளது என்கிறார்கள்.

Advertisment

இந்தியாவில் குழந்தைகளின் கல்வி குறித்து முடிவு எடுப்பதில் குடும்பம் முக்கிய பங்கு வகின்றது. அதிலும் பெற்றோர்கள் இடையே கடுமையன விவாதங்களை கண் கூடாகவே காண முடிகிறது. அப்படியே அவர்கள் சரியான படிப்பை தெரிவு செய்தாலும் குடும்பத்தின் பொருளாதாரம் அடுத்த இடையூறாக அமைகின்றது. வெளிநாடுகளில் படிக்க சலுகை பெற்றவர்கள், மற்றும் அதிக வருமானம் உள்ளவர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை உயர் படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றன. அதோடு இங்கு உள்ள பல்கலைக்கழகங்களின் கல்வித் தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கின்றது. சரியான குடும்ப சூழல் அமைந்தால் தான் குழந்தைகள் கல்வியில் வளர்ச்சி அடைவார்கள் என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விப் பேராசிரியர் பூனம் பாத்ரா கூறுகிறார்

 

publive-image சுவாதி ப்ரஸ்டி

 

27 வயதாகும் சுவாதி ப்ரஸ்டி 2010 -ம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்தார். அதன்பின் பிட்ஸ்-பிலானி கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பயின்றுள்ளார். அதன்பின் பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம்-ல் எம்பிஏ பயின்றுள்ளார். தற்போது மும்பையில் உள்ள எல் அண்ட் டி இன்ஃபோடெக் எனும் நிறுவனத்தில் வியூக ஆலோசகராக பணிபுரிகின்றார். வெளிநாடு செல்லாதற்கான காரணத்தை கேட்டதற்கு,

"வெளிநாடு சென்று படிக்க கடன் வாங்க வேண்டும். அதை திருப்பி செலுத்துவதற்காக அங்கேயே வேலை செய்ய வேண்டும். இந்தியாவிலே படிக்க முடிவு செய்ததால் கடன் வாங்குவதில் அர்த்தமில்லை. மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மீதும் அங்கு சென்று குடியேறுவதிலும் ஈடுபாடு இல்லை. மேலும் தமக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அளித்த உதவித்தொகையை நிராகரித்து விட்டதாகவும், அதோடு மட்டுமல்லாது இங்கேயே படித்தால் பெற்றோரரை அடிக்கடி சந்திக்கலாம். மற்றும் இந்தியாவில் இருப்பது பாதுகாப்பாகவே இருக்கிறது" என்று சுவாதி கூறினார்.

குடும்ப சூழல்

உயர்மதிப்பெண் எடுத்தவர்களில் 45 சதவிகித ஆண்களும் 43 சதவிகிதபெண்களும் மட்டுமே முதுகலை படிப்பை தெரிவு செய்து படிக்கிறார்கள். பெண்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே ஆராய்ச்சி படிப்பை

மேற்கொள்கிறார்கள். எனவே பெண்களின் சதவிகிதம் குறைந்து காணப்படுவதற்கு குடும்பம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.

 

publive-image சோஹினி சாப்ராலா

2008 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தவர் சோஹினி சாப்ராலா (30 வயது). தற்போது ஆராய்ச்சி மேலாளராக, அமெரிக்க பொருளாதார நிபுணரான டீன் கார்லன் நிறுவியுள்ள இலாப நோக்கமற்ற நிறுவனத்தில் பணி புரிகின்றார்.

அவரிடம் வெளிநாடு செல்லாதற்கான காரணத்தை கேட்டதற்கு, " ஐ.ஐ.டி-கான்பூரில் எம்.எஸ்.சி (ஒருங்கிணைந்த) பொருளாதாரத்தில் முதுகலை பெற்றுள்ளேன் மற்றும் பொது கொள்கை / நிர்வாகத்தில் ஆராச்ச்ய்ச்சி படிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்த போது எனக்கு திருமணம் ஆகியது ஆதலால் படிப்பை தொடர முடியவில்லை. நான் ஒரு பெண்ணாக பிறவாமல் இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை வேறு விதமாக மாறி இருந்திருக்கும். இதை இந்த சமூகத்தின் மீது குறை கூறும் வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை" என்று சாப்ராலா கூறுகிறார். தற்போது சொந்த தொழிலில் ஈடுபட்டு வரும் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் ஹைதராபாத்துக்கு அருகே வசித்து வருகின்றார்.

 

 

publive-image

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) போன்ற துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் :

கடந்த சில வருடங்களாகவே இளங்கலை கற்பவர்களில் பாலின இடைவெளி அதிகரித்து வருகின்றது. 2018 - ல் (AISHE) உயர்கல்வி தொடர்பான அகில இந்திய கணக்கெடுப்பின் படி முதல் முறையாக 48.19 லட்சம் மாணவ - மாணவிகள் இளங்கலை அறிவியல் பட்ட படிப்பிற்காக பதிவு செய்து இருந்தார்கள். அதில் மாணவர்கள் 50.7சதவிகிதம் பேரும், மாணவிகள் 49.3 சதவிகிதம் பேரும் பதிவு செய்துள்ளனர். அது போலவே முதுகலை படிப்பிற்காக பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது. 2017-18-ம் ஆண்டு முதுகலை அறிவியலில் 100 மாணவர்களுக்கு 171 மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இதுவே ஐந்து ஆண்டிற்க்கு முன்னர் முதுகலை அறிவியல் படிப்பிற்காக 100 மாணவர்களுக்கு 138 மாணவிகளே பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

(AISHE) உயர்கல்வி தொடர்பான அகில இந்திய கணக்கெடுப்பு குறிப்பிடுவது போல, STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) படிப்பவர்களின் எண்ணிக்கையில் பாலின பிளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகின்றது. ஏனென்றால், தேசிய அளவில் முதலிடங்களில் வருபவர்கள் அனைவருமே பெரும்பாலும் அறிவியல் பாட பிரிவை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

தேசிய அளவில் முதலிடம் பெற்ற 10 மாணவர்களில் 7 மாணவர்கள் இளங்கலை பட்ட படிப்பில் பொறியியல் படிப்பை தெரிவு செய்கிறார்கள். ஆனால் மாணவிகள் இளங்கலை பட்ட படிப்பில் பொருளாதாரம் மற்றும் நிர்வாக மேலாண்மை போன்ற பாட பிரிவுகளை தெரிவு செய்கிறார்கள்.

publive-image ஷாலாக குல்கர்னி

24 வயதாகும் ஷாலாக குல்கர்னி 2012 ம் ஆண்டு மும்பையிலுள்ள ஐ ஐ டியில் மின் பொறியியல் முடித்தார். 2012 ம்ஆண்டு ஐ.சி.எஸ்.இ (ICSE) போர்டு நடத்திய தேர்வில் 98.8 சதவீகிதம் மதிப்பெண் பெற்றவர். தற்போது யாலே ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ படித்து வருகின்றார். அவரிடம் ஏன் மாணவிகளை விட மாணவர்கள் பொறியியல் படிப்பை தெரிவு செய்கிறார்கள் என்று கேட்டதற்கு, "நான் பயிலும்போது வெறும் 130 மாணாவிகள் தான் இருப்பார்கள். ஆனால் மாணவர்கள் டஜன் கணக்கில் இருப்பார்கள். இருந்த போதிலும் அனைவரையும் சமாகவே நடத்துவார்கள். போராசிரியர்கள் கேள்விகள் எழுப்பும் போது கூட மாணவர்களே அதிகம் பதில் கூறுவர். நாங்கள் கூறும் பதில்கள் தவறாக இருக்கும் என கருதி என்னை போன்ற மாணாவிகள்பதில் அளிப்பதில் இருந்து விலகியே இருப்போம்" என்று ஷாலாக கூறுகிறார்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) போன்ற படிப்புகளை குறைவான பெண்களே தெரிவு செய்து பயில்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகவே தெரிய வருகின்றது. இன்றைய பொருளாதார சுழலில் இது போன்ற பாட பிரிவுகளில் தான் அதிக வேலை வாய்ப்பு காணாப்படுகின்றது. மற்றும் நல்ல ஊதியமும் வழங்கப்படுகின்றது.

தேசிய அளவில் முதலிடம் பெற்ற பெண்களில் ஐந்தில் ஒருவர்தான் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM ) போன்ற பாட பிரிவுகளில் பயின்று இந்தியாவில் பணி புரிகின்றனர். அது போலவே ஆண்களில் ஐந்தில் இரண்டு நபர்கள் தான் பணி புரிகின்றனர்.

இந்த பாகுபாடு பள்ளிகளில் பாட பிரிவுகளை தெரிவு செய்வதில் இருந்தே ஆரம்பமாகிறது. தேசிய அளவில் முதலிடத்தில் வரும் 96 சதவிகித ஆண்கள் 11 ம் மற்றும் 12ம் வகுப்புகளில் அறிவியல் பாட பிரிவுகளை தெரிவு செய்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் பெண்களில் வெறும் 71 சதவிகிதம் பேர் தான். அதே வேளையில் 10 பெண்கள் பொருளாதார பாட பிரிவை தெரிவு செய்தவர்களாக இருக்கிறார்கள் ஆனால் முதலிடத்தில் வரும் 51 ஆண்களில் இருவர் தான் பொருளாதார பாட பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

அமீதா வாட்டல், ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியின் முதன்மை ஆசிரியராக பணி புரிகின்றார்.

பெண்கள் பொதுவாகவே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) போன்ற பாட பிரிவுகளை தெரிவு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இது ஒரு பாரம்பரியமாகவே தொடர்கின்றது. அதனால்தான் வெளிநாடுகளில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகின்றது என்கிறார்.

சமூக மற்றும் கலாச்சார சவால்கள்

சமூக - கலாசார, மற்றும் குடும்ப சூழல் போன்ற காரணிகள் தேசிய அளவில் முதலிடத்தில் வரும் பெண்களுக்கு இடையூறாக அமைகின்றது. சிலருக்கு குடும்பத்தில் இருந்து அழுத்தம் ஏற்படா விட்டாலும், பாரம்பரிய தொழிலையே தொடர நினைக்கிறார்கள்.

கேள்விகேக்கப்பட்ட முதலிடம் வந்த 45 ஆண்களுக்குமே குடும்பம் தங்களுடைய கல்வி மற்றும் பணிக்கு எந்தவொரு இடையூறாக இல்லை என கூறியுள்ளனர். அதேவேளையில் முதலிடம் வந்த பெண்களுக்கு கண்ணுக்கு தெரியாத அளவுக்கு தடைகள் காணப்பட்டதாகவும், திருமணமாகிவிட்டால் கடமைகள் அதிகரித்து விடுகின்றன என்றும் கூறுகின்றனர்

பெரும்பாலான முதலிடம் பிடித்த 60 சதவிகித பெண்கள் டயர்-1 நகரங்களைச் சார்ந்தவர்களாகவும், முதலிடம் பிடித்த 60 சதவிகித ஆண்கள் டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

41 வயதான ஷாலினி பிரசாத், அசன்சோலில் உள்ள லோரெட்டோ கான்வென்ட் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை பயின்றார். மேலும் தனது உயர்நிலைப் பள்ளியை தன்பாத்தின் முக்மாவின் டி நோபிலி பள்ளியில் பயின்றார். முதலிட பட்டியலில் 13 நபர்களில் ஒருவராக வரும் இவர் டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களைச் சேர்ந்தவர் .1997 ல் 12 ஆம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த பிரசாத், இப்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பெட்ரோலியத்தில் துணைத் தலைவராக (நிதி) பணியாற்றி வருகிறார்.

"என்னுடைய வாழ்க்கையில் இரண்டு முக்கியமான நபர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

பள்ளி தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க உந்து சக்தியாக என் தந்தை இருந்தார். வெளிநாட்டில் சென்று பணிபுரிய என்னுடைய மாமா ஊக்கம் அளித்தார். சமூகத்தில் இன்னும் நிறைய தடைகளை சந்திக்கிற பெண்கள் உள்ளார்கள்" ஷாலினி கூறுகிறார்.

"முதுகலை படிக்கும் போது என்னை திருமணம் செய்ய வற்புத்தினார்கள். இது எனக்கு மிகவும் வேதனை அளித்தது. அதற்காக என்னுடைய கனவையும், லட்சியத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை " என மற்றுமொரு தேசிய அளவில் 99 சதவிகிதம் பெற்ற மாணவி கூறியுள்ளார்.

 

publive-image ஸ்ப்ரிஹா பிஸ்வாஸ்

ஸ்ப்ரிஹா பிஸ்வாஸ் (26 வயது), இவர் 2011 ஆம் ஆண்டின் ஐ.சி.எஸ்.இ.யின் தேர்வில் தேசிய முதலிடம் பெற்றவர். அதன்பின் ஐ.ஐ.டி-மும்பையில் உலோகவியல் பொறியியல் பயின்றவர். மும்பையில் உள்ள மருத்துவ டிரான்ஸ்கிரிப்ஷன் நிறுவனமான ஸ்கிரிப்டெக்கில் தலைமை தயாரிப்பு அதிகாரியாக பணியாற்றுகிறார். "நான் இதுவரை எந்தவித பாலின பாகுபாட்டையும் சந்திக்கவில்லை. ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த கல்லூரியிலோ அல்லது பணிபுரியும் இடத்திலோ இருந்தால் நாம் சிறுபான்மையினர்தான் என்ற எண்ணம் கண்டிப்பாக எழுகின்றது. நமக்கு தோன்றும் புதிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றோம்" என கூறுகின்றார்.

Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment