இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் – KUDSIT

Education news in Tamil, India first digital university KUDSIT: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது. இது கடந்த மாதம் தொடங்கப்பட்டு இந்திய தகவல் தொழிநுட்ப மேலான்மைக் கழகம், கேரளாவால் மேம்படுத்தப்பட்டது.டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் உயர்கல்வியில் உலகத்தரத்தை அமைக்க விரும்புகிறது. இந்திய மற்றும் உலகளாவிய முன்னனி தொழில் நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்களை இணைக்கும் முயற்சியை முன்னெடுக்கிறது.

Digital Marketing

கேரள யுனிவர்சிட்டி ஆஃப் டிஜிட்டல் சயின்சஸ், இன்னொவேசன், அண்ட் டெக்னாலஜி  (Kerala University of Digital Sciences,Innovation and Technology – KUDSIT) என்பதே இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஆகும்.

இப்பல்கலைக்கழகம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது. இது கடந்த மாதம் தொடங்கப்பட்டு இந்திய தகவல் தொழிநுட்ப மேலான்மைக் கழகம், கேரளாவால் மேம்படுத்தப்பட்டது.

கணினி அறிவியல், தகவலியல், பயன்பாட்டு மின்னியல் போன்ற படிப்புகளையும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், ப்ளாக்செயின், சைபர் செக்யூரிட்டி, டேட்டா அனாலிடிக்ஸ் போன்ற படிப்புகளையும் வழங்குகிறது.

இப்பல்கலைக்கழகம் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் உயர்கல்வியில் உலகத்தரத்தை  அமைக்க விரும்புகிறது. இந்திய மற்றும் உலகளாவிய முன்னனி தொழில் நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்களை இணைக்கும் முயற்சியை முன்னெடுக்கிறது.

வைராலஜி, பார்மா மார்கெட்டிங், ரோபோட்டிக்ஸ், டேட்டா சயின்ஸ், ஹெல்த் கேர், டிஜிட்டல் ஆடிட்டிங், ஃபிண்டெக் போன்ற பல்வேறு படிப்புகளை ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இஞ்சினியரிங், ஸ்கூல் ஆஃப் டிஜிட்டல் சயின்ஸ்சஸ், ஸ்கூல் ஆஃப் எலக்ட்ரானிக் சிஸ்டம் அண்ட் ஆட்டோமேசன், ஸ்கூல் ஆஃப் இன்ஃபர்மேட்டிக்ஸ் மற்றும் ஸ்கூல் ஆஃப் டிஜிட்டல் ஹூமானிட்டிஸ் ஆகிய கல்வி நிலையங்கள் வழங்குகின்றன.

இப்பல்கலைக்கழகம் டெக்னோசிட்டியில் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இங்கு 1200 மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Education news in tamil first digital university kudsit

Next Story
பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகள்- அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com