Advertisment

பி.டெக் / எலக்ட்ரானிக் மீடியா போன்ற 17 உயர்க்கல்வி படிப்புகளுக்கு தமிழக அரசின் அறிவிப்பு என்ன ?

தமிழக உயர்க்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் எலெக்ட்ரானிக் மீடியா , பி.டெக் போன்ற 17 உயரக் கல்வி பட்டங்களை அதன் முதன்மை படிப்புகளோடு சமம் என்று உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பி.டெக் / எலக்ட்ரானிக் மீடியா போன்ற 17 உயர்க்கல்வி படிப்புகளுக்கு தமிழக அரசின் அறிவிப்பு என்ன ?

Various Educational qualifications possessed by the candidates as equivalent / not equivalent to the courses offered by the various Universities

Various Educational qualifications possessed by the candidates as equivalent / not equivalent to the courses offered by the various Universities :  தமிழக அரசின் உயரக்கல்வி குறித்த புதிய அறிவிப்பு பல ஆயிரம் மாணவர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்டியுள்ளது.  உதாரணமாக, டிஎன்பிஎஸ்சி போன்ற அரசுத் தேர்வுகளில் விண்ணப்பிக்கும் போது, பொறியியாளர்(பி.இ) படிப்பு கட்டாயம் எனக் குறிப்பிட்டிருக்கும். அதனால் பி.டெக் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாது. இந்த இரண்டு படிப்புகளுக்கும் கிட்டதட்ட ஆறு செமஸ்டர்களும் ஒத்திப் போவதாய் இருந்தாலும் இந்த இரண்டு படிப்புகளும் சமம் இல்லை என்றே பொருள் கொள்ளப்பட்டது.  அதேபோன்று, விஸ்வல் கம்யூனிகேஷன் என்ற கல்வித் தகுதிக்கு அண்ணா பலகலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக் மீடியா படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

Advertisment

தமிழக உயர்க்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிக்கையில் எலெக்ட்ரானிக் மீடியா , பி.டெக் போன்ற 17 உயரக் கல்வி பட்டங்களை அதன் முதன்மை படிப்புகளோடு (அதாவது, பி.இ, விஸ்வல் கம்யூனிகேஷன் ) சமம் என்று உத்தரவிட்டுள்ளது.

publive-image

publive-image

publive-image

 

publive-image

publive-image

publive-image

இதனால், 17 உயரக் கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகும் என்று நம்பப்படுகிறது.

மேலும், 6 உயர்க்கல்வி பட்டங்கள் (அப்பாரல் டெக்னாலஜி ) அதன் முதன்மை படிப்புகளுக்கு சமம் இல்லை என்றும் இந்த அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது.

publive-image

publive-image

publive-image

 

 

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment