/tamil-ie/media/media_files/uploads/2022/06/online-education.jpg)
Educationalist dissatisfied UGC’s move to shift 40% classes online: பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) அறிவிப்பான, ஆன்லைன் கற்றல் படிப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்களை செயல்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு பாடத்தின் 40% வகுப்புகளை ஆன்லைனில் நடத்த கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் வசதி ஆகியவை கல்வியாளர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
ஜூன் 3 தேதியிட்ட அறிவிப்பில், UGC செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் “ஸ்வயம் தளத்தின் மூலம் வழங்கப்படும் படிப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், இதனால் மாணவர்கள் சமூகம் அதிகபட்ச பலன்களைப் பெற முடியும். ஸ்வயம் மூலம் வழங்கப்படும் MOOC ஐ (பெருந்திரள் திறந்தநிலை ஆன்லைன் பாடங்கள்) ஏற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் உங்களின் தீவிர ஒத்துழைப்பைக் கோருகிறேன்,” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், பெரும்பாலான மாணவர்களிடம் ஆன்லைன் கல்விக்கு ஏற்ற உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் இல்லாத நிலையில், நேரடி வகுப்புகளை ஆன்லைன் வகுப்புகளால் மாற்றுவது பயனற்றதாக இருக்கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள்: TNTET தேர்வு; இப்படி படிங்க… ஈஸியா பாஸ் ஆகலாம்!
மாணவர்களில் பலர் விளிம்புநிலை சமூகங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெரும்பாலும் டிஜிட்டல் அணுகல் இல்லாதாவர்கள், எனவே ஆன்லைன் வகுப்புகள் கடினம். ஸ்மார்ட்போன் வைத்திருப்பது என்பது டிஜிட்டல் ஊடகத்தை "அணுகல்" என்று அர்த்தமல்ல. SWAYAM போர்ட்டல் மற்றும் MOOC களின் விதிமுறைகள் பல்கலைக்கழகங்கள் முழுவதும் உள்ள இளங்கலைப் படிப்புகளின் பணிச்சுமையை வெகுவாகக் குறைக்கும். ஆன்லைன் கற்பித்தல் ஒருபோதும் வகுப்பறை கற்பித்தலுக்கு மாற்றாக இருக்க முடியாது. வகுப்பறை கற்பித்தல் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் ஆசிரியர்களுடனான தொடர்புகள் மூலம் நேரடி விவாதங்களில் ஈடுபடுவதால், மாணவர்களை ஆர்வமுள்ள கற்றவர்களாக மாற்றுகிறது. மேலும் ஆசிரியர் காலியிடங்களும் அதிகரிக்கும், என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.