/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1663.jpg)
employment news jobs in chennai metro jobs in chennai - 60 சதவிகித மதிப்பெண் வைத்துள்ளீர்களா? 25,000 ரூபாய் சம்பளத்தில் வேலை ரெடி!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடங்கள்: 3
பணியின் தன்மை: உதவியாளர் (அக்கவுன்ட்ஸ், டிஎம்எஸ்)
கல்வித் தகுதி: அக்கவுன்ட்ஸ் பிரிவில் உதவியாளர் பணிக்கு வணிகவியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் முதுகலைப் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
டிஎம்எஸ் பிரிவின் உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூபாய் 25,000/-
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.
https://chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.