Advertisment

கார்டைட் பேக்டரியில் அப்ரன்டிஸ் பணி வாய்ப்பு

இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neet 2020, neet registration

neet 2020, neet registration

நீலகிரி மாவட்டம் அரவங்காட்டில் உள்ள கார்டைட் பேக்டரியில் மூலமாக பல்வேறு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

காலியிட விபரம்: கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் 40 இடங்களும், டிப்ளமோ அப்ரென்டிஸ் பிரிவில் 50 இடங்களும் காலியாக உள்ளன. இவற்றில் கிராஜூவேட் பிரிவில் எலக்ட்ரிகலில் 4, மெக்கானிக்கல், கெமிக்கலில் தலா 10, சிவிலில் 5, கம்ப்யூட்டர் சயின்சில் 4, என்விரான்மென்டலில் 3, இன்ஸ்ட்ரூ மெண்டேஷனில் 2, கம்ப்யூட்டர், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்கில் தலா 1ம் காலியிடங்கள் உள்ளன. டிப்ளமோ அப்ரென்டிஸ் பிரிவில் எலக்ட்ரிகல், கம்ப் யூட்டரில் தலா 5, மெக்கானிக்கலில் 20, கெமிக்கலில் 10, இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் 2, என்விரான் மென்டலில் 3ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : அப்ரென்டிஸ்ஷிப் விதிகளின்படி வயது நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் அப்ளிகேஷன் டேடா அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கல்வித் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2019 மே 6.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment