பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS) ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான EMRS ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏக்லவ்யா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் (EMRS) 38480 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதையும் படியுங்கள்: TRB Jobs; தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய வேலை வாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!
காலியிடங்களின் விவரம்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 38480
ஆசிரியர் பணி சார்ந்த காலியிடங்களின் எண்ணிக்கை : 22940
முதல்வர் - 740
துணை முதல்வர் - 740
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் - 8140
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (கணினி அறிவியல்) - 740
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் - 8880
கலை ஆசிரியர் - 740
இசை ஆசிரியர் - 740
உடற்கல்வி ஆசிரியர் - 1480
நூலகர் - 740
ஆசிரியர் அல்லாத காலியிடங்களின் எண்ணிக்கை : 15860
செவிலியர் - 740
விடுதி காப்பாளர் - 1480
ஆலோசகர் - 740
முதுநிலை செயலக உதவியாளர் - 740
இளநிலை செயலக உதவியாளர் - 1480
கணக்காளர் - 740
ஆய்வக உதவியாளர் - 740
ஓட்டுனர் - 740
எலக்ட்ரீசியன்-கம்-பிளம்பர் - 740
சமையல்காரர் - 740
கேட்டரிங் உதவியாளர் - 740
மெஸ் ஹெல்பர் - 1480
தோட்டக்காரர் - 740
சௌகிதார் - 1480
தூய்மை பணியாளர் - 2220
ஒவ்வொரு நேரடி ஆட்சேர்ப்பும் தொடக்கத்தில் தகுதிகாண் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும். தகுதிகாண் காலம் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகள் ஆகும், இது மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம். தகுதிகாண் காலம் முடிவடைந்தவுடன், நியமன அதிகாரி விண்ணப்பதாரரின் செயல்திறனில் திருப்தி அடைந்தால், அவரது நியமனத்தை உறுதிப்படுத்துவார்.
இந்த அறிவிப்பு தொடர்பான விவரங்கள் https://emrs.tribal.gov.in/ என்ற EMRS இன் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்கும்.
ஏகலவ்யா மாதிரி பள்ளி ஆட்சேர்ப்பு 2023க்கு எப்படி விண்ணப்பிப்பது?
படி 1: ஏகலவ்யா மாதிரி பள்ளியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://recruitment.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
படி 2: முகப்பு பக்கத்தில் "Careers/Notification" தாவலைக் கிளிக் செய்யவும்.
படி 3 EMRS Recruitment 2023 என்பதை கிளிக் செய்யவும்.
படி 4: EMRS ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பப் படிவத்தை அனைத்து கட்டாய விவரங்களுடன் நிரப்பவும்.
படி 5: உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பம், சான்றிதழ்கள் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
படி 6: கட்டணப் பக்கத்திற்குச் செல்வதற்கு முன் உங்கள் விண்ணப்பப் படிவத்தின் அனைத்து விவரங்களையும் மீண்டும் சரிபார்க்கவும்.
படி 7: குறிப்பிட்ட வகை வாரியாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
படி 8: submit என்பதை கிளிக் செய்யவும்.
படி 9: விண்ணப்பப் படிவத்தை வெற்றிகரமாகச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, உறுதிப்படுத்தல் பக்கத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம்.
மேலும் விவரங்கள் அறிய விண்ணப்பதாரர்கள் EMRS இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.