Advertisment

மத்திய கல்வி துறையில் 4062 காலியிடங்கள்; அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

பழங்குடியினருக்கான ஏக்லவ்யா பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
teacher

பழங்குடியினருக்கான ஏக்லவ்யா பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS) ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான EMRS ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் செயல்படும் 400 ஏக்லவ்யா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் (EMRS) 4062 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Advertisment

பள்ளி முதல்வர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 303

கல்வித் தகுதி : Master’s Degree மற்றும் B.Ed. degree படித்திருக்க வேண்டும். மேலும் 12 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 78800- 209200

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2266

கல்வித் தகுதி : Master’s Degree மற்றும் B.Ed. degree படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 47600- 151100

கணக்காளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 361

கல்வித் தகுதி : Degree of Commerce படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 35400- 112400

இளநிலை செயலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 759

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 19900- 63200

ஆய்வக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 373

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 18000- 56900

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://emrs.tribal.gov.in/show_content.php?lang=1&level=1&ls_id=332&lid=223 என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.10.2023

விண்ணப்பக் கட்டணம் : முதல்வர் – ரூ. 2000, ஆசிரியர் – ரூ. 1500. ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் – ரூ. 1000

இந்த அறிவிப்பு தொடர்பான விவரங்கள் https://emrs.tribal.gov.in/site/Information-Bulletin.pdf என்ற EMRS இன் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs Teacher
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment