சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெள்ளிக்கிழமை (மே 19) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், “என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஒரு மாததுக்கு முன்னதாகவே தொடங்க உள்ளது. அந்த வகையில் தற்போது என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கும்” என்றார்.
Advertisment
தொடர்ந்து, “சிபிஎஸ்இ மற்றும் மாநில கல்வி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது” எனவும் அவர் விளக்கம் அளித்தார். இதையடுத்து, “முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் பொதுப்பிரிவினருக்கு ஜூலை 7ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடக்கும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“