Advertisment

உயர்கிறது பொறியியல் கட் ஆஃப்: முக்கிய கல்லூரிகளை இப்போதே மொய்க்கும் மாணவர்கள்

Engineering cut off increase because high scores in 12th std, competition to top colleges: பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதோடு, கட்- ஆப் மதிப்பெண்களும் அதிகரித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
நிறைவு பெற்றது பொறியியல் கலந்தாய்வு : 100 கல்லூரிகளில் 20% இடங்கள் கூட நிரம்பவில்லை!

இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது தமிழக அரசு. மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக வழிகாட்டு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அமைத்த பரிந்துரைகளின்படி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்யும் முறை வெளியிடப்பட்டது.

Advertisment

இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமையன்று, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 100% தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தேர்வு நடத்தப்படும். ஆனால், அப்படி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்த தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்களே இறுதியானது என்பதால், நிறைய மாணவர்கள் தேர்வு எழுத தயக்கம் காட்டலாம் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், அறிவியல் பாடப்பிரிவுகளில் 30,600 மாணவர்கள் 551-600 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 551-600 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தொழிற்கல்வி பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551-600 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பொறியியல் சேர்க்கைக்கான கட்-ஆஃப் இந்த ஆண்டு பல்வேறு கட் ஆஃப் மதிப்பெண் அடுக்குகளில் 5 மதிப்பெண்கள் முதல் 25 மதிப்பெண்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு  அறிவியல் பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 551-600 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுகளை விட 15 மடங்கு ஆகும்.

கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஒவ்வொரு அடுக்கிற்கு ஏற்றாற்போல் மாறுபடும். அதேநேரம் பொறியியல் படிப்புகளில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் உயரும். 190 க்கு மேல் எடுத்தவர்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண்கள் 5-7 வரை அதிகரிக்கக்கூடும், 180 க்கு மேல் உள்ளவர்களுக்கு 15 மதிப்பெண்கள் வரை அதிகரிக்கும், ஏனெனில் இந்த ஆண்டு 170-185 கட்-ஆஃப் வரம்பில் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள். என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு 190 மதிப்பெண்கள் பெற்ற மாணவரின் தரவரிசை எண் 3,445 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 9,000 க்கு மேல் இருக்கலாம். இதேபோல் கடந்த ஆண்டு 180 மதிப்பெண்கள் பெற்ற மாணவரின் தரவரிசை எண் 9,190 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 22,000 க்கு மேல் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கான AICTE இன் திருத்தப்பட்ட கல்வி அட்டவணை

* முதல் சுற்று பொறியியல் கலந்தாய்வை முடிக்க கடைசி தேதி - செப்டம்பர் 30

* தொழில்நுட்ப படிப்புகளின் தற்போதைய மாணவர்களுக்கு ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான கடைசி தேதி - அக்டோபர் 1

* இரண்டாவது சுற்று கலந்தாய்வு முடிக்க கடைசி தேதி - அக்டோபர் 10

* முதல் ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கடைசி தேதி - அக்டோபர் 20

* தொழில்நுட்ப படிப்புகளின் முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான கடைசி தேதி - அக்டோபர் 25

* இரண்டாம் ஆண்டில் (lateral entry) நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி - அக்டோபர் 30

பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதோடு, கட்- ஆப் மதிப்பெண்களும் அதிகரித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அவசியம் என்பதோடு, மருத்துவ இடங்களும் குறைவு. இதேபோல் வேளான் படிப்புகளிலும் இடங்கள் குறைவு. அதேநேரம் இந்த ஆண்டு அதிகப்படியான மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளதாலும், அவர்கள் பொறியியல் படிப்புகளை தேர்ந்தெடுக்க முனைவதாலும் போட்டி கடுமையாக இருக்கும்.

அதுவும் அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, கோவை பொறியியல் கல்லூரி போன்றவற்றில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளில் இடங்களைப் பெற மாணவர்களிடையே கடும் போட்டி இருக்கலாம். இதேபோல் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சேர்வதற்கும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

அடுத்ததாக, சில முன்னணி தனியார் கல்லூரிகளுக்கும் கடும் போட்டி இருக்கும். மாணவர்கள் சில நேரங்களில் விரும்பிய பாடப்பிரிவுகளுக்காக, அரசு கல்லூரிகளில் பிற பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் இருந்தாலும், தனியார் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் சில தனியார் கல்லூரிகள் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை விட மாணவர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. ஆனால், சில தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டா வை இப்போதே கல்லூரிகளில் முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டார்கள். சில கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டா முன்பதிவு முடிந்துவிட்டது. சென்னையை சுற்றியுள்ள முக்கிய கல்லூரிகள் சிலவற்றில் மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு ரூ 3 லட்சம் முதல் ரூ 8 லட்சம் வரை நன்கொடை வாங்குவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதனிடையே, மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதில் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. கல்லூரிகளின் முந்தைய வருட தேர்ச்சி விகித அடிப்படையில், பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையை வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பாடப்பிரிவை மாணவர்கள் அதிக அளவில் ஆர்வமுடன் தேர்வு செய்து வந்தனர். தற்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களிடையே ஆர்வம் இருப்பதாக தெரிகிறது.

எப்போதும்போல், மெக்கானிக் மற்றும் சிவில் படிப்புகள் முன்னிலையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அரசு வேலைவாய்ப்பை விரும்புபவர்கள் இந்த பாடப்பிரிவுகளை தேர்தெடுக்கின்றனர். இந்த பாடப்பிரிவுகளில் தமிழிலும் பயிற்றுவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழ் வழியில் இந்த பாடப்பிரிவுகளைப் படிக்கவும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், பாடபிரிவுகளை விட கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு மாணவர்களை கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிலர் தனக்கு பிடித்த பாடப்பிரிவுக்காக ஏதோ ஒரு கல்லூரியை தேர்வு செய்கின்றனர். அதைவிடுத்து தலைசிறந்த கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிப்பது நல்லது என்று கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Engineering College Admission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment