எம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை போற்றவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று இந்தியா முழுவதும் பொறியாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. எம் விஸ்வேஸ்வரய்யா என்று பிரபலமாக அறியப்படும் இவரது முழுப்பெயர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா. பொறியாளர் தினம் இலங்கை மற்றும் தான்சானியாவிலும் செப்டம்பர் 15 அன்று கொண்டாடப்படுகிறது.
எம் விஸ்வேஸ்வரய்யா 1861 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள சிக்கபல்லாப்பூரில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். தனது சொந்த ஊரில் முறையான பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, விஸ்வேஸ்வரய்யா மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்தார். ஆனால், பின்னர் அவர் புனேவில் உள்ள அறிவியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்புக்கு மாறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Engineers’ Day 2023: Why it is celebrated on September 15; interesting facts on M Visvesvaraya
பொறியாளர்கள் தினம் 2023: எம் விஸ்வேஸ்வரய்யா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
– எம் விஸ்வேஸ்வரய்யா வெள்ளப் பேரிடர் மேலாண்மை மற்றும் நீர்ப்பாசனத் தொழில் நுட்பங்களில் சிறந்தவர்
– எம் விஸ்வேஸ்வரய்யா நீர்ப்பாசனத் தொழில் நுட்பங்கள் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான அவரது பணிக்காக போற்றப்படுகிறார்
- அவர் காப்புரிமை பெற்று, புனே அருகே உள்ள கடக்வாஸ்லா நீர்த்தேக்கத்தில் நீர் பாய்ச்சலுடன் கூடிய நீர்ப்பாசன அமைப்பை நிறுவினார்.
- எம் விஸ்வேஸ்வரய்யா மைசூர் திவானாக ஆட்சி செய்தார், அங்கு அவர் பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
- 1917 இல், விஸ்வேஸ்வரய்யா கர்நாடகாவில் அரசு பொறியியல் கல்லூரியை நிறுவினார், இது இப்போது பல்கலைக்கழக விஸ்வேஸ்வரயா பொறியியல் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.
– எம் விஸ்வேஸ்வரய்யா 1955 இல் பாரத ரத்னா விருதைப் பெற்றார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“