Advertisment

ஆங்கிலம் தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமே, அறிவுஜீவியின் அளவுகோல் அல்ல: பிரதமர் மோடி

முன்பு, ஆங்கில மொழியின் அறிவு அறிவுஜீவிக்கான அடையாளமாகக் கருதப்பட்டது. உண்மையில், ஆங்கில மொழி ஒரு தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமே – பிரதமர் மோடி

author-image
WebDesk
Oct 19, 2022 16:50 IST
ஆங்கிலம் தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமே, அறிவுஜீவியின் அளவுகோல் அல்ல: பிரதமர் மோடி

மத்திய அமைச்சர் அமித் ஷா எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான இந்தி பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்திய மூன்று நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை, முன்னர் ஆங்கிலம் தகவல் தொடர்பு ஊடகமாக இருந்தாலும், அறிவுஜீவியாக இருப்பதற்கான அளவுகோலாகக் கருதப்பட்டது, என்று கூறினார். உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்துவதை ஆதரித்து பேசிய மோடி, “முன்பு, ஆங்கில மொழியின் அறிவு அறிவுஜீவிக்கான அடையாளமாகக் கருதப்பட்டது. உண்மையில், ஆங்கில மொழி ஒரு தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமே,” என்று கூறினார்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னையில் மத்திய அரசு வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

காந்திநகர் மாவட்டத்தில் உள்ள அடலாஜ் நகரில் குஜராத் அரசின் மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் பேசினார். ஆங்கிலத்தில் அசௌகரியம் உள்ளவர்கள் பின் தங்கி விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட 5ஜி தொலைத்தொடர்பு சேவை நாட்டின் கல்வி முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் பிரதமர் கூறினார்.

“5G சேவையானது ஸ்மார்ட் வசதிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் கற்பித்தல்களுக்கு உதவும். இது நமது கல்வி முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்” என்று பிரதமர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment