Advertisment

11, 12 வகுப்பில் ஆங்கிலம் கட்டாயமில்லை : மகாராஷ்டிராவில் பள்ளி கல்வித்துறை புதிய திட்டம்

மகாராஷ்டிரா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) வெளியிட்டுள்ள 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்விக்கான (SE) வரைவு மாநில பாடத்திட்டத்தில் ஆங்கிலம் கட்டாயமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Maharastra School

வெளிநாட்டு மொழி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் ஆங்கிலம் கட்டாயமில்லை

வெளிநாட்டு மொழி என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஆங்கில மொழி இனி கட்டாயமில்லை என்று மகாராஷ்டிர மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கல்வியில் பல வேறுபாடுகள் இருக்கிறது. அதே சமயம், மாநில மொழியுடன் சேர்ந்து ஆங்கிலத்தை 2-வது மொழிப்பாடமாக பல மாநிலங்களில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ஆங்கிலம் வெளிநாட்டு மொழி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால், 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஆங்கிலம் கட்டாமில்லை என்று மகாராஷ்டிர மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) தெரிவித்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க : English not a must in Class 11, 12; to be treated as ‘foreign language’ in Maharashtra

நேற்று முன்தினம் (மே22) மகாராஷ்டிர மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்விக்கான (SE) மாநில வரைவு பாடத்திட்டக் கட்டமைப்பு (SCF) இது குறித்து பரிந்துரை செய்துள்ளது. மாநிலத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முன்மொழியப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் எட்டு பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் 2 மொழிப்பாடங்கள், சுற்றுச்சூழல், உடற்கல்வி மற்றும் அவர்கள் விரும்பும் நான்கு பாடங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.

இதன் மூலம் மாநில வரைவு பாடத்திட்டக் கட்டமைப்பு (SCF) திட்டம், கலை, வணிகம், அறிவியல் உள்ளிட்ட கற்றல் பாடங்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது குறித்து மாநில வரைவு பாடத்திட்டக் கட்டமைப்பு அளித்துள்ள மொழி விளக்கப்படத்தின்படி, 17 பூர்வீக இந்திய மொழிகள் மற்றும் ஒன்பது வெளிநாட்டு மொழிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஆங்கிலம் முதலிடத்தில் உள்ள மொழிகளில் ஒன்று ஆனாலும் அது இந்திய வம்சாவளியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து பிரபல கல்வியாளர் வசந்த் கல்பாண்டே, கூறுகையில்,ஆங்கிலத்தை எப்படி வெளிநாட்டு மொழியாகக் கருத முடியும்?” மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கிடையேயான அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பு, நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு அரசு ஆவணங்களில் ஆங்கிலம் மு்ககியத்துவம் பெற்றுள்ளது.  இந்தியுடன் ஆங்கிலமும் இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

மேலும் மாநில வரைவு பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியிட்டுள்ள பாட வரைவில், 3 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான ஆங்கில மொழிக் கொள்கையில் தெளிவுகள் இல்லை. இந்த பள்ளிகளில் இதுவரை ஆங்கிலம் கட்டாயமாக இருந்தது. தற்போது முன்மொழியப்பட்ட பாடக் கலவைகளின்படி, 3 முதல் 5 வகுப்புகள் வரை மூன்று மொழிப்பாடங்கள் இருந்த நிலையில், தற்போது இரண்டு மொழிகள் மட்டுமே இருக்கும். இதில் முதல் மொழி தாய்மொழியாகவோ அல்லது மாநில மொழியாகவோ (மராத்தி) இருக்கும் நிலையில், இரண்டாவது மொழி வேறு எந்த மொழியாகவோ இருக்கலாம்.

இதனிடையே பள்ளிகள், குறிப்பாக ஆங்கில வழிக்கல்வி பள்ளிகள், இந்த புதிய திட்டத்தின் மூலம் செயல்படுத்துவது குறித்து கவலை தெரிவித்துள்ளன.பல்வேறு தாய்மொழியில் வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு நாங்கள் கல்வி கொடுக்கிறோம். இதன் பொருள் எங்களுக்கு இரண்டாவது விருப்பம் உள்ளது, இது அடிப்படையில் மராத்தி மொழியை கற்றுக்கொள்ளலாம். தற்போது உள்ள திட்டத்தின்படி செயல்பட்டால், எப்படி ஆங்கில வழிப் பள்ளிகளாக இருக்க முடியும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஒரு ஆசிரியர் கூறியுள்ளார்.

மேலும் கணிசமான புலம்பெயர்ந்த மக்கள்தொகை கொண்ட மகாராஷ்டிரா மாநிலம் நகரமயமாக்கப்பட்ட மற்றும் தொழில்மயமான தன்மையைக் கருத்தில் கொண்டு, முன்மொழியப்பட்ட அமைப்பு, தங்கள் குழந்தைகளின் பள்ளிக்கல்விக்கான பயிற்றுவிக்கும் பள்ளி மற்றும் மொழிக்கல்வியை தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது என்று பல ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர்.

7 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு, முன்மொழியப்பட்ட பாடத்திட்டம், எந்தெந்த மொழிகள் என்று குறிப்பிடாமல் மூன்று மொழிகளைப் பரிந்துரைக்கிறது. 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு, மூன்றில் இரண்டு மொழிகள் தேர்வு செய்யலாம் என்றும் அவை இரண்டும் இந்திய வம்சாவளியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தியைக் கட்டாயப் பாடமாக மாற்றிய 2021 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசின் முடிவிற்கு, விருப்ப மொழித் தேர்வு என்ற புதிய திட்டம் முரணாக இருப்பதாக சில கல்வி வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குழப்பமான இந்த மொழிக் கொள்கைக்கு கூடுதலாக, பாரம்பரிய கலை, வணிகம் மற்றும் அறிவியல் ஸ்ட்ரீம்களை மாற்றியமைத்து, மேல்நிலை கல்விக்கு பல ஒழுங்குமுறை அணுகுமுறையை வழங்குவது குறித்தும் மாநில வரைவு பாடத்திட்டக் கட்டமைப்பு  விவாதிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு துறைகளில் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பெறுவார்கள்.

மகாராஷ்டிரா மாநில பள்ளி முதல்வர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மகேந்திர கன்புலே, ஜூன் 3 வரை மாநில வரைவு பாடத்திட்டக் கட்டமைப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் வரைவு குறித்த பொதுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

யோகா, பண்டைய இந்திய தொழில்நுட்பங்கள், அறிவியல் மற்றும் நவீன கணிதத்திற்கான வரலாற்று இந்திய பங்களிப்புகள், முக்கோணவியலில் ஆர்யபட்டாவின் பணி போன்ற பாடத்திட்டத்தில் இந்திய அறிவு அமைப்பை இணைக்கவும் மாநில வரைவு பாடத்திட்டக் கட்டமைப்பு பரிந்துரைக்கிறது. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் இந்தியாவின் அறிவு மரபுகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய பாடநெறி இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment