scorecardresearch

EPFO நிறுவனத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு, டிகிரி தகுதிக்கு 2859 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

EPFO jobs; ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 2859 சமூக நல அலுவலர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

How to EPFO higher pension dues calculation
அதிக ஊதியத்தில் முதலாளியின் பங்கு 8.33 சதவீதம் ஆகும்.

12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான அருமையான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனத்தின் இந்த வேலை வாய்ப்புக்கான தகுதிகள், காலியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) 2859 சமூக நல அலுவலர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் 10000 ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமனத் தேர்வு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

சமூக நல அலுவலர் (Social Security Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை – 2674

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 29,200 – 92,300

சுருக்கெழுத்து தட்டச்சர் (Stenographer)

காலியிடங்களின் எண்ணிக்கை – 185

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 25,500 – 81,100

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் கணிதம், திறனறிதல், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வு 2 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://recruitment.nta.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2023

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இருப்பினும் பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்று திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Advertisement_for_SSA_24032023.pdf மற்றும் https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Advertisement_for_Stenographer(Gr.C)_24032023.pdf என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Epfo recruitment 2023 for 2859 ssa and steno jobs apply online

Best of Express