பி.எப். அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு உதவியாளர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

EPFO SSA Admit Card 2019 at epfindia.gov.in: மாதம் ரூ.44,900/ ஆக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. TA, DA, HRA உள்ளிட்ட சலுகைகளும் உண்டு

By: Updated: July 31, 2019, 08:20:01 PM

Employees’ Provident Fund Organisation EPFO SSA admit card 2019 : தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் சமூகபாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான முதனிலை தேர்வு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட், https://www.epfindia.gov.in/site_en/index.php இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இரண்டு வகையிலான தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முதனிலை ( prelims) தேர்வில், மாணவர்களின் செயல்திறன் கண்காணிக்கப்பட உள்ளது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாது. தேர்வர்களின் செயற்திறனை பொறுத்து அவர்கள் முதன்மை தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முதன்மை (MAIN) தேர்வு, விரிவாக விடையளிக்கும் வகையில் இருக்கும். இத்தேர்வின் மூலமே, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம் : மாதம் ரூ.44,900/ ஆக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. TA, DA, HRA உள்ளிட்ட சலுகைகளும் உண்டு

ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யும் வழிமுறை

https://www.epfindia.gov.in/site_en/index.php இணையதளத்திற்கு செல்லவும்
download admit card லிங்கை சொடுக்கவும்
பதிவு எண்ணை குறிப்பிட்ட இடத்தில் நிரப்பவும்
ஹால் டிக்கெட், திரையில் தெரியும்.
அதை டவுன்லோடு செய்து, பின்வரும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Epfo ssa admit card 2019 how to download at epfindia gov in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X