Erode farmer’s daughter wins Rs.3 crore scholarship at Chicago University: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைப் படிக்க ரூ.3 கோடி மதிப்பிலான முழு உதவித்தொகையையும் பெற்றுள்ளார்.
ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளான ஸ்வேகா சாமிநாதன், டெக்ஸ்டெரிட்டி குளோபல் நிறுவனத்தின் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வேகா 14 வயதில் டெக்ஸ்டெரிட்டி குளோபல் மூலம் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டார்.
தன் குடும்பத்தில் முதலில் கல்லூரிக்குச் செல்லும் ஸ்வேகா சாமிநாதன் உயிரியல் படித்து விஞ்ஞானி ஆகத் திட்டமிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட முழு ஸ்காலர்ஷிப், ஸ்வேகாவின் நான்கு வருட படிப்புக்கான முழுச் செலவையும் உள்ளடக்கும். இதில் கல்விக் கட்டணம், விடுதி மற்றும் தேர்வுக் கட்டணம், புத்தகங்கள் மற்றும் பொருட்கள், உடல்நலக் காப்பீடு, தனிப்பட்ட மற்றும் பயணச் செலவுகள் ஆகியவை அடங்கும்.
உதவித்தொகை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், ஸ்வேகா நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக டெக்ஸ்டெரிட்டி குளோபல் தெரிவித்துள்ளது. மேலும், அதன் நிறுவனர் ஷரத் சாகர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil