Erode Health department jobs 2022 apply soon, சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! | Indian Express Tamil

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், அரசு மருத்துவமனைகளில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 19 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,500

Operation Theater Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : OT Technician course முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,200

MPHW

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

Security Guard

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : BPT படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

Early Intervention cum Special educator cum Social worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல்/ சமூகப்பணி/ சமூக அறிவியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 17,000

OT Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in OT Technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,200

Refrigeration Mechanic

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ITI in Mechanic in Refrigeration Air conditioning படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், திண்டல், ஈரோடு – 638012

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.10.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Erode health department jobs 2022 apply soon