ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியே தேவை என்பதால், விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஈரோடு மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள், இணை இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: SSC CHSL 2022; மத்திய அரசில் 4500 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே விண்ணப்பிங்க!
சமையலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 9
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சலவையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2022 அன்று 18 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : இணை இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள், ஈரோடு.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.12.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil