Advertisment

சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வி தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 4 பணியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs

அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மூலம் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தபடவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆலோசகர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: TNPSC வேலை வாய்ப்பு; உதவி ஜெயிலர் பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

முதுநிலை ஆலோசகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : சட்டம்/ முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட முன் அனுபவம் அவசியம்

சம்பளம்: ரூ. 20,000

வழக்கு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : சட்டம்/ முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட முன் அனுபவம் அவசியம்

சம்பளம்: ரூ. 15,000

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : கல்வி தகுதி தேவையில்லை.

சம்பளம்: ரூ. 10,000

பல்நோக்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : கல்வி தகுதி தேவையில்லை.

சம்பளம்: ரூ. 6,400

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2023/04/2023041166.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 6வது தளம், ஈரோடு - 642011

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2023/04/2023041166.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment