சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செவிலியர் வேலை வேண்டுமா?

ESIC Chennai Recruitment 2019 Notification Released at www.esic.nic.in : 111 செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு 24.01.2019க்குள் விண்ணப்பிக்கலாம்.

By: Updated: January 7, 2019, 03:23:10 PM

ESIC Chennai Recruitment 2019 : சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செவிலியர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்புவதற்காக தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.  111 செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு 24.01.2019க்குள் டி.என்.பி.எஸ்.சி இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

காலியாக இருக்கும் பணியிடங்கள்

செவிலியர் – 84 பணியிடங்கள்
அல்லோபதி பார்மசிஸ்ட் – 09 பணியிடங்கள்
சோசியல் கைட் / சோசியல் வொர்க்கர் – 02 பணியிடங்கள்
லேப் அசிஸ்டண்ட் – 10 பணியிடங்கள்
ஆப்பரெசன் தியேட்டர் அசிஸ்டண்ட் – 05 பணியிடங்கள்
ஆயுர்வேதம் பார்மசிஸ்ட் – 01

மேலும் படிக்க : வேளாண் துறையில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன

செவிலியர் பணியிடங்கள் – கல்வித் தகுதி

நர்சிங் கவுன்சிலிங்கில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட செவிலியராக இருத்தல் அவசியம்.  மிட்ஃவொப் அல்லது அதற்கு இணையான ஜெனரல் நர்சிங் (டிப்ளமோ) முடித்திருக்க வேண்டும்.

ESIC Chennai Recruitment 2019 – வயது வரம்பு

செவிலியர்கள் – 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

ஃபார்மசிஸ்ட் (அல்லோபதி) – 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

சோசியல் கைட் / சோசியல் வொர்க்கர் – 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

ஆய்வக உதவியாளர் – 32 வயதிற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்

ஆப்ரேசன் தியேட்டர் உதவியாளர் – 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பார்மசிஸ்ட் (ஆயுர்வேதம்) – 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்திற்கான கட்டணத் தொகை

முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் பட்டியல் இனத்த்தை சேர்ந்த தேர்வர்களுக்கு 250 ரூபாய் கட்டணம்.

இதர வகுப்பினருக்கு – 500 ரூபாய் கட்டணம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Esic chennai recruitment 2019 apply for staff nurse posts at esic nic in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X