scorecardresearch

ESIC Jobs; தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை; 1120 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

தொழிலாளர் காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ESIC recruitment 2021 for 1120 Medical Officer posts: தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள மருத்துவ அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியானவர்கள் 31.01 2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காப்பீட்டு மருத்துவ அலுவலர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1120

கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 31.01.2022 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 56,100 – 1,77,500

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு 200 வினாக்களுடன் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.esic.nic.in/recruitments என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2022

விண்ணப்பக் கட்டணம் : SC/ST, பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளுக்கு ரூ 250, பொது மற்றும் OBC பிரிவுகளுக்கு ரூ.500

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய  https://www.esic.nic.in/attachments/recruitmentfile/0421d96b22441db072cf4e56b260ebd9.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Esic recruitment 2021 for 1120 medical officer posts