Advertisment

தொழிலாளர் காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ESIC jobs; தொழிலாளர் காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தொழிலாளர் காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ESIC recruitment 2022 for 93 SSO or Manager posts: தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள சமூக பாதுகாப்பு அலுவலர் அல்லது மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 93 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 12.04 2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

சமூக பாதுகாப்பு அலுவலர்/ மேலாளர் (Social Security Officer/ Manager Gr-II)

காலியிடங்களின் எண்ணிக்கை : 93

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 12.04.2022 அன்று 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 44,900 – 1,42,400

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கணினி அறிவு மற்றும் விரிவான விடையளித்தல் தேர்வு என மூன்று பகுதிகளாக நடைபெறும். இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் -30 (English language), திறனறிதல் -35 (Reasoning ability) மற்றும் கணிதத்தில் -35 (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (30), திறனறிதல் (40), கணிதம் (40) மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial/Banking Awareness) (40) என மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.

இதையும் படியுங்கள்: TNPSC Exam: உங்க வீட்டில் இருந்தபடி டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு பயிற்சி; தொடங்கி வைத்த ஸ்டாலின்!

கணினி அறிவு மற்றும் விரிவான விடையளித்தல் தேர்வு

முதன்மை தேர்வில் தகுதி பெறுபவர்களுக்கு, கணினி அறிவு மற்றும் விரிவான விடையளித்தல் தேர்வு நடைபெறும். இது இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் கணினி அறிவு தொடர்பான தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 30 நிமிடங்கள். அடுத்ததாக விரிவான விடையளித்தல் தேர்வில் கட்டுரை அல்லது கடிதல் எழுதுதல் தொடர்பாக இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 50 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.esic.nic.in/recruitments அல்லது https://ibpsonline.ibps.in/esicssomar22/ என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.04.2022

விண்ணப்பக் கட்டணம் : SC/ST, பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளுக்கு ரூ 250, பொது மற்றும் OBC பிரிவுகளுக்கு ரூ.500

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய  https://www.esic.nic.in/attachments/recruitmentfile/137aadcd28fca627bf24b12befd88720.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment