/tamil-ie/media/media_files/uploads/2021/12/esic-jobs.jpg)
ESIC jobs; தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வேலைவாய்ப்பு
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் (ESIC) காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதில் நாடு முழுவதும் மொத்தம் 1930 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 27.03.2024 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Nursing Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1930
கல்வித் தகுதி : B.Sc. Nursing/ Diploma in General Nursing Mid-Wifery படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.upsconline.nic.in என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.03.2024
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவுகளுக்கு ரூ.25. SC/ST, பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/AdvtNo-52-2024-Spcl-NrsngOfcr-engl-070324.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.