தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வில் 440 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், 11,224 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து 2ஆம் சுற்று கலந்தாய்வு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் 20,438 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதன்படி, பொறியியல் கலந்தாய்வில் 2 சுற்றுகள் முடிவில் மொத்தம் 31,662 இடங்கள் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இரண்டாம் சுற்று முடிவில், 26 கல்லூரிகளில் 80 சதவிகிதத்துக்கு அதிகமான இருக்கைகளும், 61 கல்லூரிகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகளும் நிரப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இம்முறை அதிகளவிலான மாணவர்கள் பொறியியல் படிப்பின் மீது ஆர்வம் கொண்டுள்ளதால், காலியாக இருக்கும் கல்லூரி இருக்கைகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழ் குறையும் என கல்வி நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூன்றாம் சுற்றில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், கவுன்சிலிங்கில் கல்லூரிகளைத் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் சுற்று முடிவில், இதுவரை 72 கல்லூரிகளில் ஒரு இருக்கையை கூட மாணவர்கள் யாரும் தேர்ந்தெடுக்கவில்லை. சுமார் 440 மாணவர்கள் முதல் ரவண்டில் தவறான கல்லூரியைத் தேர்ந்தெடுத்ததால், இரண்டாம் ரவுண்டில் அவர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது. கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஆல் பாஸ் அறிவிப்பு, பொறியியல் கலந்தாய்வில் இம்முறை அதிகளவில் இருக்கைகள் தேர்ச்சியாகும் என கல்வி ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil