தமிழக அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் என மாணவி ஒருவர் கோரிக்கை விடுத்திருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் பரவி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து தெலுங்கு போஸ்ட் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட் (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை மற்றும் தேசியக் கல்விக்கொள்கை செயல்படுத்தப்படுவதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு மற்றும் மத்திய அரசு நேரடியாக மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. மாநில அரசின் எதிர்ப்பை மீறி, இந்தி உள்ளிட்ட மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் "ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்” என அறிவுரை வழங்கினார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், “தேன்கூட்டில் கல் எறிய வேண்டாம்” என மத்திய அரசை எச்சரித்தார். இந்த சூழல், மும்மொழிக் கொள்கை பற்றிய விவாதத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
மேலும் மும்மொழி தொடர்பான விவாதத்தில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழர்களின் மொழிப் பெருமையை வலியுறுத்தி, “தமிழர்கள் தாய் மொழிக்காகவே உயிரிழந்து இருக்கிறார்கள்” எனக் கூறினார். தமிழை பிரதான மொழியாகக் கொண்டிருக்கும் தமிழகத்தில், மற்றொரு மொழியை கட்டாயமாக்கும் முயற்சி தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான கடுமையான மோதலுக்கு மத்தியில், பள்ளியில் இருக்கும் மாணவி ஒருவர் பலகையில் தமிழில் எழுதப்பட்ட ஒரு செய்தியுடன் இருக்கின்ற புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அதில், “திராவிடமாடல் அரசே... அரசு பள்ளிகளில் இந்தியை கற்று கொடு! அல்லது இந்தியை கற்றுக்கொடுக்கும் தனியார் கல்வி நிலையங்களை இழுத்து மூடு!! பாமரனுக்கு கிடைக்காத கல்வி யாருக்கும் வேண்டாம்” என எழுதியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைச் சரிப்பார்ப்பு
இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் குறித்தும், அதில் கூறப்பட்டது இருப்பது குறித்தும் உண்மைத் தன்மை குறித்து தெலுங்கு போஸ்ட் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட் (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
இந்த தகவல் குறித்து தெலுங்குபோஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு குழு ஆய்வு செய்துள்ளனர். முதலில், புகைப்படத்தில் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள தமிழ்ப் பாடத்தை நுணுக்கமாக ஆராய்ந்துள்ளனர். அப்போது, அது கணினி மூலம் சேர்க்கப்பட்ட மிருதுவான, ஒழுங்கான விளிம்புகளைக் கொண்டிருந்தது. இயற்கையாக பல்பம் அல்லது சாக் பீஸ் கொண்டு எழுதப்பட்ட எழுத்துக்கள் பிளவு, முறிவு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.
/indian-express-tamil/media/post_attachments/c776b73f-c92.jpg)
வைரல் புகைப்படத்தையும், இயற்கையாக எழுதுப்பொருள் கொண்டு எழுதப்பட்ட சிலேட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மேலும் இந்த செய்தியை, Bing Image Tool மூலம் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அதே புகைப்படம் iStockPhoto உள்ளிட்ட தொகுப்புசார் புகைப்பட (Stock Photo) வலைத்தளங்களில் தமிழ் எழுத்துகளின்றி காணப்பட்டது. இதே புகைப்படம் பிற புகைப்படத் தொகுப்பு தளங்களிலும் காணப்பட்டது.

இதனை ஒப்பீட்டு பார்க்கலாம். இந்த புகைப்படத்தில் உள்ள மாணவி தமிழக அரசின் மொழிக் கொள்கையை விமர்சித்ததாக எந்த ஆதாரமும் இல்லை. தமிழில் எழுதப்பட்ட வார்த்தைகள் கணினி மூலம் சேர்க்கப்பட்டதாகும். அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாணவி முன்வைத்ததாக உருவாக்கப்பட்ட போலித் தகவல் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டுள்ளது. அதனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது.
இறுதியில், தமிழில் எழுதிய சிலேட்டை வைத்திருக்கும் மாணவியின் புகைப்படம், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக பகிரப்பட்டு வரும் தகவல் தவறானது என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட் (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://www.telugupost.com/tamil-factcheck/viral-photo-of-girl-holding-slate-sparks-claim-of-demand-for-hindi-in-tamil-nadu-schools-1569304