Fact Check: மறைந்த முன்னாள் குடியரசு தலைவைர் அப்துல் கலாம் மற்றும் மறைந்த பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் கல்வி உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் என்றும், 75% மேல் மதிப்பெண் பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10000 ரூபாயும், 85% மேல் மதிப்பெண் பெற்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது என்றும் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
மேலும், இந்த கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும், 'உயர் நீதிமன்ற உத்தரவு எண்: WP (MD) NO.20559/2015' எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்தத் தகவலின் உண்மைத் தன்மையை நியூஸ் மீட்டர் இணையதளம் ஆய்வு செய்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (Newsmeter.in ) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
இந்தத் தகவல் உண்மை தானா? என்பதை கண்டறிய, இதுகுறித்து மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இவ்வாறான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா? என்று தேடப்பட்டது. அப்போது, அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த ஒரு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், 10 ஆம் வகுப்பில் 75% மற்றும் 12ஆம் வகுப்பில் 85% மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 10,000 மற்றும் ரூ. 25,000 உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் என்ற தகவலை சமூக வலைதளங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவறான தகவல் என்றும் கூறியுள்ளதாக என்று 'தி இந்து' (The Hindu) நாளேடு கடந்த மே 16 ஆம் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, இதனை உறுதிப்படுத்தும் விதமாக 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி இது தொடர்பாக பத்திரிகை தகவல் பணியகம் (PIB Fact Check) அதன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் 10 அல்லது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. எனவே, இவ்வாறாக வைரலாகும் செய்தி தவறானது” என்று கூறப்பட்டுள்ளது.
முடிவில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக வைரலாகும் தகவல் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நியூஸ் மீட்டர் இணையதளம் நிரூபித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (Newsmeter.in ) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
இதையும் படியுங்கள்: Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம், வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.