Advertisment

நீட் தேர்வு ஆக்ஸ்ட் வரை ஒத்திவைப்பா: உண்மை என்ன?

கொரோனா ஆபத்துக்கள் மிகத் தீவிரமடைந்தால், “பொருத்தமான நடவடிக்கைகளை” தனது அமைச்சகம் எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET Exam Postponed , NEET Exam, NEET Exam August , NEET Exam Fake NEws

NEET Exam Postponed , NEET Exam, NEET Exam August , NEET Exam Fake NEws

NEET Exam Fake News: மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு  (நீட்) மேலும்  சில காலம் ஒத்திவைக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் சுற்றறிக்கை போலியானது என்று தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து  வருவதால்,நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பெரும்பாலான மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும், இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை.

Advertisment

பல காணொளி காட்சியில், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் (HRD) மாணவர்களின் கவலைகளை பிரதிபலிக்கும் வகையில் பேசி வருகிறார். மேலும், கொரோனா ஆபத்துக்கள் மிகத் தீவிரமடைந்தால், “பொருத்தமான நடவடிக்கைகளை” தனது அமைச்சகம் எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை,  சமூக ஊடகங்களில்   #StudentsLivesMatter # postponejeeneet2020, #HealthOverExams மற்றும் #HealthOverNEETjee உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் மூலம் வெளிபடுத்தி வருகின்றனர்.

 

 

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு மொத்தம் 15,93,452 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது, முதன்முறையாக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு  பதிவு செய்திருந்தனர்.

பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நீட் உள்ளிட்ட தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதியன்று நடைபெறும் என்றும் , ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment