2020-21 கல்வியாண்டு முதல், எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ பட்டப் படிப்புகளில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானவர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
Advertisment
மத்திய தொகுப்புக்கு அளிக்கப்பட்ட மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பான வழிமுறைகளை அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரேதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக அகில இந்திய வானொலி நிறுவனம் தெரிவித்தது.
தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் பணியமர்த்தப்பட்டு ஆபத்து எச்சரிக்கை கணிசமாக உள்ள வீரரின் வாரிசுகள், பயங்கரவாத அமைப்புகளின் 'ஹிட் லிஸ்ட்' பட்டியலில் இருக்கும் வீரர்களின் வாரிசுகள், காஷ்மீரில் இருந்து புலம்பெர்யர்ந்து, தற்போது வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட இருப்பதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மேலும், மருத்துவக் கல்வியில் குறைபாடுள்ள மாநிலங்கள்/ யூனியன் பிரேதேசங்கள், பயங்கரவாதச் செயல்கள் மற்றும் எல்லைத் தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அப்பாவி பெற்றோர் அல்லது குடும்ப நேரடி உறுப்பினர்களின் குழந்தைகள், ஜம்மு-காஷ்மீர், லடாக் பிரேதேசங்களில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான சண்டையில் ஆயுதப்படையால் சுடப்பட்டவர்களின் வாரிசுகள் உள்ளிட்ட அனைவரும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் மத்திய தொகுப்பில் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நீட் அல்லது இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைக்கும் பிற தகுதித் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. கோவிட் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, தேர்வு மையங்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 3,843-ஆக அதிகரிக்கப்பட்டதுடன், ஒரு அறைக்கு 12 பேர் வீதமும், ஒரு மேசைக்கு ஒருவர் என்ற அடிப்படையிலும், தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.
தகுதியான மாணவர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை, பிற ஆவணங்களுடன் -
ஜிமெயில் முகவரி: rajiv.kumar67@nic.in (அ)
ராஜீவ் குமார், துணை செயலாளர் (சி.டி- II), அறை எண் 81, வடக்கு தொகுதி, புது தில்லி - 110001 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அனுப்பலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil