/tamil-ie/media/media_files/uploads/2022/08/fci-jobs.jpg)
FCI recruitment 2022 for 5043 Junior Engineer and Assistant posts apply soon: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவு கழகத்தில் இளநிலை பொறியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய உணவுக் கழகத்தில் பொது, டெபோட், கணக்கியல், தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளில் ஜூனியர் இன்ஜினியர், ஸ்டெனோகிராபர், அசிஸ்டெண்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5043 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு அடங்கிய தென் மணடலத்தில் மட்டும் 989 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.10.2022க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: அண்ணா பல்கலை. வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
J.E. (Civil Engineering)
காலியிடங்களின் எண்ணிக்கை : 48
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும். அல்லது Diploma in Civil Engineering படித்து 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 34,000- 1,03,400
J.E. (Electrical Mechanical Engineering)
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Electrical Engineering or Mechanical Engineering படித்திருக்க வேண்டும். அல்லது Diploma in Electrical Engineering or Mechanical Engineering படித்து 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 34,000- 1,03,400
Stenographer - II
காலியிடங்களின் எண்ணிக்கை : 73
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 30,500- 88,100
Assistant (General)
காலியிடங்களின் எண்ணிக்கை : 948
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 28,200- 79,200
Assistant (Accounts)
காலியிடங்களின் எண்ணிக்கை : 406
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.com படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 28,200- 79,200
Assistant (Technical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1406
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc. in Agriculture or B.Sc in Botany / Zoology / Bio-Technology / Bio-Chemistry / Microbiology / Food Science/ or B. Tech / BE in Food Science / Food Science and Technology / Agricultural Engineering / Bio-Technology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 28,200- 79,200
Assistant (Depot)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2054
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 28,200- 79,200
Assistant (Hindi)
காலியிடங்களின் எண்ணிக்கை : 93
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 28,200- 79,200
வயது வரம்பு தளர்வு : SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சில பதவிகளுக்கு முதன்மைத் தேர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.recruitmentfci.in/current_category_third_main_page.php?lang=en என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.10.2022
ஒருவர் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணபிக்க முடியும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500. ஆனால் SC / ST / PwBD / பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.recruitmentfci.in/assets/current_category_III/FINAL%20CAT-III%20ADVT%20(2022)%20Final.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.